2023.02.17 1
பிரதேச செயலக பொங்கல் விழா 2023.02.17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. இதன் போது அனைத்து உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் கிளைகள் ரீதியான பொங்கல் போட்டி நிகழ்வு மற்றும் சிறப்பு பட்டிமன்ற நிகழ்வுகள் என்பன இடம்பெற்றிருந்தன.
கிளைகள் ரீதியாக இராசவள்ளிக்கிழங்கு பொங்கல், முந்திரிப் பொங்கல், மிளகுப் பொங்கல், எள்ளுப் பொங்கல், பசும்பால் பொங்கல், மரவள்ளிக்கிழங்குப் பொங்கல், நெய்ப் பொங்கல், பழப் பொங்கல், மரக்கறிப் பொங்கல், பருப்புவகைப் பொங்கல் போன்ற பொங்கல் வகைகளுடன் கலாசாரப் பிரிவினால் பிரதான பொங்கல் ஆலய வளாகத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்றது.
அத்துடன் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து பாரம்பரியத்தை போற்றுபவர்கள் பெண்களா? ஆண்களா? எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. தொடர்ந்து கிளைகள் ரீதியாக இடம்பெற்ற பொங்கல் போட்டியில் வெற்றி பெற்ற கிளைகளுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023.02.17 2
2023.02.17 3
2023.02.17 4
2023.02.17 5
2023.02.17 6
2023.02.17 7
2023.02.17 8
2023.02.17 9
2023.02.17 10
2023.02.17 11
2023.02.17 12
2023.02.17 13
சமூக நலன்புரி நன்மைகள் பெற்றுக் கொள்ள தகுதியானவர்களை அடையாளம் காணல்
 
நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளத் தகுதியான நபர்களை அல்லது குடும்பங்களை தெரிவு செய்வதற்கான கள ஆய்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் வருகை தரவுள்ளனர். அவ்வாறு வருகை தரும் போது பின்வரும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறும் கணக்கெடுப்பிற்கு தேவைப்படும் தகவல்களை வழங்கி அவர்களுக்கான பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
1.அடையாள அட்டை
2.வங்கிக்கணக்கு புத்தகம்
3.மின்சாரப்பட்டியல், நீர்ப்பட்டியல்
4.சமுர்த்தி கணக்கு புத்தகம் இருப்பின்
5.பொதுசன மாதாந்த உதவிப்பண அட்டை இருப்பின்
6.முதியோர் கொடுப்பனவு அட்டை இருப்பின்

மண்முனைப்பற்று சர்வ மத ஒன்றியம் ஒன்றியத்தின் (கரித்தாஸ் - எகெட்) அனுசரனையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 11 பாடசாலைகளைச் சேர்ந்த 44 மாணவர்களுக்கான தலைமைத்துவ (போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு) கருத்தரங்கு 2023.02.08 ஆம் திகதி புதன்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நிர்வாக உத்தியோகத்தரின் தலைமையில் நடைபெற்றது. வளவாளராக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை சிரேஷ்ட உளநல வைத்தியர் Dr. யூடி ரமேஷ் ஜெயக்குமார் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2023.02.08 1

2023.02.08 2

2023.02.08 3

2023.02.08 4

2023.02.08 5

2023.02.08 6

சமுர்த்தி நஞ்சற்ற வீட்டுத் தோட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனை பிரதேச செயலக வளாகத்தினுள் 2023.02.01 ஆம் திகதி புதன்கிழமை இன்று நடைபெற்றது. இச்சந்தையில் நஞ்சற்ற பாவை, காட்டு நெல்லி, அம்பரெல்லா, குப்பைக் கீரை, றம்பை, முல்லை, கானந்தி, பொன்னாங்கானி, முட்டை, வல்லாரை, அகத்தி, பசளி போன்றன விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2023.02.01 1

2023.02.01 2

2023.02.01 3

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top