மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் இவ் வருடத்திற்கான மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02.09.2026 பிற்பகல் 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கெளரவ கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான
ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், கலாநிதி எம்.எல்.எ.எம் ஹிஸ்புள்ளா மற்றும் இரா சாணக்கியன் ஆகியோருடன் மண்முனைப்பற்று பிரதேச சபையின் பிரதி கௌரவ தவிசாளர், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் மற்றும் அரச திணைக்களங்களின் திணைக்கள தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு திணைக்களங்கள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், 2026ம் ஆண்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் 2026ம் ஆண்டுக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் பிரதேசத்தில் காணப்படும் வைத்தியசாலை கள் மற்றும் கல்வியியல் கல்லூரியில் காணப்படுகின்ற குறைபாடுகள் தேவைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இக்கூட்டமானது இனிதே நிறைவு பெற்றது.
 
WhatsApp Image 2026 09 04 at 9.59.04 AM
WhatsApp Image 2026 09 04 at 9.59.03 AM 2
WhatsApp Image 2026 09 04 at 9.59.01 AM 2
WhatsApp Image 2026 09 04 at 9.59.00 AM
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்
 
02.09.2026 ஆம் திகதியன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச செயலக உள்ளகக் கணக்காய்வு பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு அவதானிப்பாளராக மட்டக்களப்பு தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு அத்தியட்சகர் திரு. ரொபட் அலோசியஸ் அவர்கள் கலந்து கொண்டதுடன் மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு A .S சசிகரன், உதவிப் பிரதேச செயலாளர் திரு K.இளங்குமுதன், கணக்காளர் திரு A. மோகனகுமார், நிர்வாக உத்தியோகத்தர் திரு S. திவாகரன் , கிராம அலுவலகர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் திரு. J. A. சுரேஸ், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள்,பதவி நிலை உதவியாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் நிதி ,நிருவாகம், திட்டமிடல், காணி , சமூக சேவை, சிறுவர் மற்றும் மகளிர், கிராம அபிவிருத்தி, கலாசாரம், விதாதா ஆகிய பிரிவுகள் மற்றும் சமுர்த்தி வங்கிகள்,மகாசங்கம் என்பன தொடர்பான மீளாய்வுகளும் 2026இன் தற்போது வரையான முன்னேற்றங்களும் பிரிவிற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களினால் முன்னளிக்கை மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
பின்னர் கணக்காய்வு. அத்தியட்சகர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் ஆகியோர்களால் ஆலோசனைகளும் கருத்துரைகளும் வழங்கப்பட்டு கூட்டமானது கணக்காளரின் நன்றியுரையுடன் பிற்பகல் 12.45 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.
 
WhatsApp Image 2026 09 03 at 12.03.59 PM
WhatsApp Image 2026 09 03 at 12.03.58 PM
WhatsApp Image 2026 09 03 at 12.03.58 PM 1
WhatsApp Image 2026 09 03 at 12.03.57 PM

எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலை ஏற்பாட்டினால் சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்பில் 19.08.2026 புதன்கிழமை மு. ப 9.00 மணிக்கு பிரதேச செயலக விதாதா வள மண்டபத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் நடாத்தப்பட்டதுடன் உத்தியோகத்தர்களின் குருதி அமுக்கம் , நிறை என்பன பார்வையிடப்பட்டது. இதில் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதன் போது புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்களினால் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

           

 

    

சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களுக்கான அருணலு கணக்கிட்டு பயிற்சி வகுப்பு 2026

 

மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை பிரிவினால் மட்டக்களப்பின் நான்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் தலைவர்களுக்கான அருணலு பயிற்சி நெறியானது இன்று மண்முனை பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சண கௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக திரு க. பகிரதன் சமுர்த்தி முகாமையாளர் , திரு நா. சசிகரன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்ச்சி வகுப்பில் மன்முனைப் பற்று, மண்முனை தென் எருவில்பற்று, போரதீவுப் பற்று, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமூர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு தலைவர்கள் இதில் பங்குபற்றி கணக்கிட்டு பயிற்சி நெறியின் பூரண அறிவினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2026 08 20 at 3.02.20 PM
WhatsApp Image 2026 08 20 at 3.03.45 PM
WhatsApp Image 2026 08 20 at 3.02.22 PM
WhatsApp Image 2026 08 20 at 3.02.21 PM

எல்-நினோ காலநிலை மாற்றம் மற்றும் எதிர்கொள்ளவிருக்கும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை என்பவற்றுடன் தொடர்புபட்ட அனர்த்தங்களுக்கான முன்னயத்தங்கள் மற்றும் தயார்படுத்தல் தொடர்பான கூட்டம் 2026.08.19 திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களது தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன்போது எல்-நினோ தொடர்பாகவும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் முன்னாயத்தங்கள் தொடர்பிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலையுடனான முன்னாயத்தங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டதுடன் அனர்த்த முன்னாயத்தங்கள் தொடர்பாக துறைசார் திணைக்களங்களுடனான விசேட கலந்துரையாடலும் நடைபெற்றது.இதில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,உட்பட அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கிய பிரதானிகளும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top