மண்முனைப்பற்று பிரதேச செயலக மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலைய மாணவர்களுக்கான அழகுக்கலை பயிற்சிநெறி தாழங்குடா மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் 2025.12.03 ஆந் திகதி பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் S.பார்த்தீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு வளவாளராக திருமதி. வனிதா செல்வபெருமாள் அவர்களும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், தையல் போதனாசிரியை மற்றும் பயிற்சி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இப் பயிற்சி நெறியானது 10 நாள் கொண்ட பயிற்சியாகும்.
 
PSDG - 2025 வேலை திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் நபர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு.
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் நபர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கானது மண்முனைப்பற்று பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் 11/11/2025 ம் திகதியன்று மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் சமூக சேவை உத்தியோகத்தர் திரு இ. சிவலிங்கம், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திரு பே.சுகநாதன் , திருமதி தே.சுதாகரன், திருமதி க. ஜீவராசா, சமூகசேவை கிளை உத்தியோகத்தர்களால் இணைந்து ஒழுங்கமைப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக திரு அ. ஜெயநாதன் உதவி கல்வி பணிப்பாளர் முறைசாரா கல்வி பிரிவு வலயக்கல்வி அலுவலகம் , திருமதி ம. கோவிதா சட்டத்தரணி , திரு ஜி. திலக்ஷன் சுகாதார வைத்திய அதிகாரி சுகாதார வைத்திய அலுவலகம் ஆரையம்பதி, திரு த. நிஷாந்தன் ஆற்றுப்படுத்தல் உத்தியோகத்தர், மாவட்ட செயலகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் பிரதேச முதியோர், மற்றும் மாற்றுத் திறனாளிகள், முதியோர் பராமரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரித்தல் தொடர்பான மனப்பாங்கினை விருத்தி செய்தல், நம்பிக்கை மற்றும் நல்லுறவினை கட்டியெழுப்புதல், அவர்களுக்கான உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களும் நடைமுறைகளும், உடல் உள மற்றும் சுகாதார பராமரிப்பு தொடர்பான வழிகாட்டல்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை சமூகத்தில் உள்ளடக்குதல், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அணுகும் வசதிகளை மேம்படுத்தல் தொடர்பான தெளிவூட்டல் கரத்தரங்காக அமைந்திருந்தது.
இதனூடாக பிரதேச முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்களது பாதுகாப்பு, பராமரிப்பு உள நலம் சுகாதாரம் சட்டங்கள் என்பவை தொடர்பாக பூரண தெளிவினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
WhatsApp Image 2025 11 12 at 16.20.521WhatsApp Image 2025 11 12 at 16.20.52WhatsApp Image 2025 11 12 at 16.21.03
கௌப்பி நிலக்கடலை 2025/2026 பெரும் போக திட்டம்
விவசாய அமைச்சினால் இன்று 07.10.2025 செவ்வாய்கிழமை 10.30 மணியளவில் எமது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாயிகளுக்கு பிரதேச செயளாலர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் நிர்வாக உத்தியோகத்தரினால் கௌப்பி நிலக்கடலை என்பன பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
 
May be an image of 5 people and people smiling
May be an image of 5 people and people smiling
May be an image of 11 people and tree
 
மண்முனைப்பற்று பிரதேச செயலக முதியோர் தலயாத்திரை.
 
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று பிரதேசசெயலக சமூகசேவை பிரிவு இணைந்து மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இவ் ஆண்டுக்கான முதியோர்களுக்கான ஆன்மீக சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் 31/10/2025 அன்று ஒழுங்குசெய்யப்பட்டது.
இதில் கோவில்குளம் ஆஞ்சனேயர் முதியோர்சங்க முதியோர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இடங்களுக்கான தல யாத்திரையாக அமைந்திருந்தது இதில் மதம் இனம் கடந்து நல்லிணக்கத்துடன் முதியோர்கள் ஒன்றாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
el 1

பௌர்ணமி கலை விழா நிகழ்வு:பௌர்ணமி கலை விழா 


எமது  மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமும் இணைந்து நடத்தும்  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் 2025.10.06 அன்று மாலை  5.30 மணிக்கு  ஆரம்பிக்கப்பட்ட பௌர்ணமி கலை நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூசகர் N. சிவாகரன் அவர்களும் பிரதம அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் திரு. S.பார்த்தீபன், கணக்காளர் திரு.A.மோகனகுமார் மற்றும் கௌரவ அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் திரு.S டிலக்‌ஷன், சமுர்த்தி அபிவிருத்தி    உத்தியோகத்தர் திருமதி மகேசதுரை மலர்விழி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ராதா கமலதாஸன், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் திரு. பா.ரமேசன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். மற்றும் கலைஞர்கள், பொதுமக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், கலைமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வானது ஆலய பூசையுடன் ஆரம்பமாகி மங்கல வாத்தியங்கள் முழங்க அதிதிகள் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன் பரமநயனார் அறநெறிப்பாடசாலை மாணவியின் தேவாரத்துடன் ஆரம்பமாகி ஆலய பூசகரால் ஆசியுரை வழங்கப்பட்டது பின்னர் ஏற்பட்ட மழை காரணமாக நிகழ்வுகள் இடை நிறுத்தப்பட்டன.

May be an image of 6 people, temple and textMay be an image of 3 people and temple

May be an image of 3 people, temple and text that says "கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலயமும் இணைந்து நடத்தும் பெளர்ணமி கலை நிகழ்வு காலம்: 06.10.2025 (திங்கட்கிழமை) நேரம்: பி.ப. 05.30 மணி இடம்: ஸ்ரீ முத்து மார் மாரியம்மன் ஆலய முன்றல், ஆரையம்பதி வடக்கு"

May be an image of 4 people, temple and text

May be an image of 9 people, temple and text

May be an image of 3 people and temple

May be an image of 11 people, temple and wedding

May be an image of 4 people and temple

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top