யோகா விழிப்புணர்வு நிகழ்வு.
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலை ஏற்பாட்டினால் அபிவிருத்தி உத்தியோகத்தரின் (சுதேச வைத்தியம்) ஒருங்கிணைப்பில் 25.06.2025 புதன்கிழமை காலை 8.30 மணிக்கு மண்முனைப்பற்று நந்தகோபன் மண்டபத்தில் சர்வதேச யோகா மாதத்தினை சிறப்பிக்கும் முகமாக யோகா விழிப்புணர்வு நிகழ்வானது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கும் ஆரையம்பதி மகாவித்தியாலய மாணவர்களுக்குமாக நடாத்தப்பட்டது. இதில் 44 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
 
WhatsApp Image 2025 06 26 at 10.49.19 1
WhatsApp Image 2025 06 26 at 10.49.20
WhatsApp Image 2025 06 26 at 10.49.21 1
WhatsApp Image 2025 06 26 at 10.49.20 1
அறநெறி ஆசிரியர்களுக்கான அறநெறி பயிற்சி பட்டறை
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டுதலுக்கமைவாக நிருவாக உத்தியோகத்தர் திரு. சின்னத்தம்பி திவாகரன் ஐயா அவர்களின் தலைமையில் பிரதேச அறநெறி ஆசிரியர்களுக்கான அறநெறி பாடசாலை புத்தகங்கள் தொடர்பான விளக்கஉரையானது அம்பாரை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு. ஜெயராஜீ அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இப்பயிற்சி பட்டறையானது 2025. 06.11 ஆந் திகதி புதன்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது அறநெறி பாடசாலைகளுக்கான பாடநூல்களும் வழங்கி வைக்கப்பட்டது.
 
WhatsApp Image 2025 06 13 at 14.15.22 1
WhatsApp Image 2025 06 13 at 14.15.23
WhatsApp Image 2025 06 13 at 14.15.22
 
மரநடுகை மற்றும் சுற்றாடல் தினம் 2025
ஜுன் 5 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு 05.06.2025 (வியாழக்கிழமை) மரநடுகை மற்றும் சுற்றாடல் தினம் கொண்டாட்ட நிகழ்வுகள் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணக் கெளரி தினேஷ் அம்மணி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக ஆரையம்பதி கிழக்கு மட்/நவரெட்னராஜா பாடசாலையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வினை பாடசாலை அதிபர் தலைமையேற்று நடாத்தினார் , அத்துடன் எமது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர் , பிரதேச செயலக சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் பங்கேற்றனர். நிகழ்வில் 20 மரக்கன்றுகள் பாடசாலை மைதானத்தில் நடப்பட்டதுடன் அதற்கான கூடுகளும் அமைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் ஆக்கதிறன் கண்காட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறுவர் நிகழ்ச்சிகள் என்பன சிறப்பான முறையில் இடம்பெற்றது.
மண்முனைப்பற்று சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இம்மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
En 1
En 2
 
En 3
 
சமுர்த்தி உளவள துணை பயிற்சி நெறி
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 11.06.2025ம் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உளவள துணை பயிற்சி நெறி நடைபெற்றது .
இதில் சமூக வலுவூட்டல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்று, காத்தான்குடி, மண்முனை தென் எருவில் மேற்கு பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக சமுர்த்தி கருத்திட்ட சிரேஷ்ட முகாமையாளர் கலந்துகொண்டனர்.
 
 
Capture

சமூக வலுவூட்டல்  பயிற்சி வேலைத் திட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் சமூக வலுவூட்டல்  பயிற்சி வேலைத் திட்டம் 03.06.2025ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கருத்திட்ட முகாமையாளர் திரு.P.பிரதீபன் , சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் திரு.பசீர் , சமுர்த்தி  தலைமையக முகாமையாளர், ஏனைய கருத்திட்ட முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Merge

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top