மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு மகப்பேற்று கிளினிக் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் ரூபா 5000.00 பெறுமதியான போசாக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 16.12.2025 செவ்வாய்க் கிழமை கிரான்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு கிளினிக்களில் பதிவு செய்யப்பட்ட 109 பயனாளி தாய்மார்களுக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் எமது மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் வைத்து கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் முன்பிள்ளைப்பருவ உத்தியோகத்தர் என்பவர்களினால் வழங்கி வைக்கப் பட்டது. இப் பொதிகள் ஏனைய பயனாளிகளான 372 பேருக்கும் எதிர்வரும் 19.12.2025 வரை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமாகிய கௌரவ கந்தசாமி பிரபு அவர்களினால் பிரதேச செயலாளர் தலைமையில் பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தில் கிராம மட்ட சமுக அபிவிருத்திசபை தலைவர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு (2025/12/16) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசசெயலகபிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து பிரிவுகளுக்குமான சமுக அபிவிருத்தி சபைக்கான தலைவர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
 
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் எமது பிரதேச செயலாளர் பிரிவில் 03.12 .2025 புதன் கிழமை அன்று காலை 9.30 மணிக்கு "சிறந்த பெற்றோராகுதல் " தொடர்பான பெற்றோர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உ த் தியோகத்தரின் ஒருங்கிணைப்பின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக பட்டிப்பளை பிரதே ச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. G. உமாரமணன் பங்குற்றினார். அத்துட ன் இந் நிகழ்வில் முன் பிள்ளைப்பருவ சிறார்களின் பெற்றோர்கள், கர்ப்பினி தாய்மார்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

சீரற்ற காலநிலை காரணமாக, "டித்வா" புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிக்கரம் நீட்டும் நோக்கில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு, மண்முனை பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கிளை ரீதியாகவும், செயலகப் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா ஸீப்ரா விளையாட்டு கழகம் மற்றும் நலன்விரும்பிகளால் வழங்கப்பட்ட அத்தியாவசிய மற்றும் உலருணவு பொருட்கள் பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஸ் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திரு.S.பார்த்தீபன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.A.சுதர்சன், நிருவாக உத்தியோகத்தர் திரு.V.தவேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டது.
கையளிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் 05.12.2025ஆம் திகதி நேற்றைய தினம் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் அம்மணி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
 
News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top