පුවත්
மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார பேரவையின் ஆலோசனையில் கைறாத் கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாத் வசந்தம் நிகழ்வு ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மன்பஉல் கைறாத் ஜும்ஆ பள்ளிவாயலில் 2023.09.25 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று பி.ப 4.30 மணிக்கு சிறப்பான முறையில் இடம்பெற்றது.
கைறாத் கலை கலாசார மன்ற தலைவர் ஜனாப் M.I.M.நஷீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் உதவி பிரதேச செயலாளர் திருமதி. லோகினி விவேகானந்தராஜ், மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளர் திரு. த.மலர்ச்செல்வன், கலாசார உத்தியோகத்தர் திருமதி. ராதிகா கருணாகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் A.L முசாதிக், கைறாத் கலைக்கழக உறுப்பினர்கள், கலைஞர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முஸ்லிம் பாரம்பரிய நிகழ்வுகளுடன் கவிதை, பாடல், பேச்சு போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வை பிரதேச கலாசார பேரவை மற்றும் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி அனுசரணையுடன் இரத்த தான நிகழ்வானது 2023.09.26 ஆம் திகதி செவ்வாய்கிழமை மு.ப 9.00 மணி தொடக்கம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு உயிர் காக்க உதிரம் கொடுத்து இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






எதிர்வரும் 2023.09.26 ஆம் திகதி செவ்வாய்கிழமை மு.ப 9.00 மணிக்கு எமது பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள இரத்த தான முகாமில் கலந்து கொண்டு உயிரைக் காக்க உதிரம் கொடுக்க முன்வருமாறு அழைக்கின்றோம்.

சமூக சேவை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடமாடும் சேவை மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 2023.09.23 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 9.00 மணி தொடக்கம் மட்/மட்/ மாவிலங்கதுறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன் போது பிரதேச செயலகம் சார்ந்த சமூக சேவை தொடர்பான சேவைகள், சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பான சேவைகள், காணி உரிமம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவு தொடர்பான சேவைகள், தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவைகள், சிறுவர், பெண்கள் மற்றும் முன்பருவபிள்ளைகள் தொடர்பான சேவைகள், சுகாதார வைத்திய அலுவலகம் சார்ந்த சேவைகள், சுதேச மருத்துவ சேவைகள், ஆயுள்வேத வைத்தியம் தொடர்பான சேவைகள் போன்றன வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





மண்முனைப்பற்று பிரதேச செயலகம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் சர்வதேச கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் நிகழ்வு 2023.09.21 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 7.00 மணிக்கு புதுக்குடியிருப்பு கடற்கரையில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு வடக்கு மற்றும் புதுக்குடியிருப்பு தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமை புரியும் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூகமட்ட குழுக்கள் மற்றும் பொதுமக்கள் என 300 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.















