පුවත්

வாசிப்போம் அனுபவிப்போம் என்ற தொனிப் பொருளில் 2023.12.11 ஆம் திகதி திங்கட்கிழமை மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலாசார பிரிவு உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன், மாணவர்களின் வாசிப்பை ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.











இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் தொடர்பான செயலமர்வு 2023.11.16 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. N. சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்முனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் புசிற்ரா பயற்றை அறுவடை நிகழ்வானது 2023.11.10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது புசிற்ரா பயற்றை அறுவடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















