පුවත්
தொழு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2024.02.19 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 1.00 மணிக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி. L.விவேகானந்தராஜ் அவர்களின் தலைமையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய 14.02.2024 அன்று புதன்கிழமை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் இடம் பெற்றது.








"சுவதரணி மூலிகைப் பயிர் வாரம்" எனும் தொனிப்பொருளில் நாடு பூராகவும் மூலிகைக் கன்றுகள் நடுகை செய்யும் நிகழ்வு 2024.02.02 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்து வைக்கப்படும் பொருட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் மூலிகை கன்றுகள் நடும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. T. தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் அவர்களால் மூலிகை கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













