ஆரையம்பதி மாற்றுத்திறனாளிகள் சமூக உள்வாங்கல் அமைப்பின் சுயதொழில் உதவி வழங்கும் நிகழ்வு YMCA நிறுவன உதவியுடன் 2024.01.23 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று தாழங்குடா சமூக பராமரிப்பு நிலையத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிரதேச செயலாளர் அவர்களால் சுயதொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024.01.23 Picture1

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் வெளிக்கள உத்தியோகத்தர்களின் பங்கு எனும் தலைப்பில் சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் 2024.01.22 ஆம் திகதி திங்கட்கிழமையன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. லோகினி விவேகானந்தராஜ் கலந்து கொண்டதோடு, நிகழ்வின் வளவாளராக களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் திரு.மு.புவனேந்திரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.01.22 Pic 01
2024.01.22 Pic 02
2024.01.08 ஆம் திகதி திங்கட்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் ஒன்பதாவது பிரதேச செயலாளராக தனது கடமையினைப் பொறுப்பேற்றிருக்கும் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னைநாள் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. L.விவேகானந்தராஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. M.ஜெயசந்திரன், கணக்காளர் திரு. V.நாகேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு. S.திவாகரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.01.08 Picture1
2024.01.08 Picture2

2024.01.19 00

உழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் வகையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா நிகழ்வானது 2024.01.19 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் மாவிலங்கதுறை கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மண்முனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வளாகத்தில் வயல் அறுவடை பாரம்பரிய நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கிளை ரீதியான பல வகையான பொங்கல் பானைகள் நிகழ்வை அலங்கரித்தன.ஆன்மீக அதிதியாக கலந்து சிறப்பித்த மாவிலங்கதுறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மண்முனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குரு திரு. மகேந்திரராசா ரஜீவன் அவர்களின் ஆன்மீக உரையுடன் நிகழ்வுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. லோகினி விவேகானந்தராஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மனோரஞ்சனி ஜெயச்சந்திரன், கணக்காளர் திரு வல்லிபுரம் நாகேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் திரு சின்னத்துரை திவாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். தொடர்ந்து மாவிலங்கதுறை ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ பத்திரகாளியம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகள், உடுக்கு இசை, பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உழவர் பாடல், கிராமிய பாடல் என பல கலை நிகழ்வுகள் இடம் பெற்றது.

இந்நிகழ்வினை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து மாவிலங்கதுறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மண்முனை பகுதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், விளையாட்டுக் கழகம், முதியோர் சங்கம், மீனவர் சங்கம், ஹெயார் நுன்நிதிச் சங்கம் என பல அமைப்புக்கள் இணைந்து ஒழுங்குபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

2024.01.19 Picture1 1280x856

2024.01.19 Picture2 1162x960

2024.01.19 Picture3 1155x960

2024.01.19 Picture4 1280x892

2024.01.05 Picture1
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் எட்டாவது பிரதேச செயலாளராக எட்டு ஆண்டுகள் (2016 - 2024) எமது பிரதேசமானது நிலைபேறான அபிவிருத்தியை அடையும் நோக்கில் தன்னாலான அர்ப்பணிப்பு மிக்க பக்கச்சார்பற்ற சேவை வழங்கி பிரதேசத்தின் கலை, கலாசாரம், விளையாட்டு என பல்துறைகளிலும் அனைத்து சேவைகளும் பிரதேச மக்களை சென்றடையும் வகையில் கண்ணியமான, நேர்த்தியான சேவையாற்றிய பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் பிரியாவிடை நிகழ்வு 2024.01.05 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது நலன்புரிச் சங்க உறுப்பினர்களால் எமது பிரதேச செயலாளர் அவர்கள் பொன்னாடை போர்த்தி, மலர்மாலைகள் மற்றும் மலர்செண்டுகள், நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டபோது நலன்புரிச்சங்கத்தினால் தனக்கென வழங்கப்பட்ட அன்பளிப்பு கொடுப்பனவினை வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பிரதேச கலைஞர்களுக்காக நன்கொடையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கு அளப்பெரிய சேவையினை வழங்கிய மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய எமது பிரதேச செயலாளர் அவர்கள் அரச சேவையில் ஏறத்தாழ 30 வருடங்களும் இலங்கை நிர்வாக சேவையில் 20 வருடங்களும் அர்ப்பணிப்புடன் தனது சேவையினை ஆற்றியவராவார்.
இவரது சேவைக் காலத்தில் இலங்கை நிர்வாக சேவையில் உதவி செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு - கிழக்கு மாகாணம், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகம் - மட்டக்களப்பு, மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் (நிர்வாகம்), மாகாண கல்வி திணைக்களம் - கிழக்கு மாகாணம், உதவி செயலாளர், கல்வி அமைச்சு - கிழக்கு மாகாணம், மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் (நிர்வாகம்), சுகாதார திணைக்களம் - கிழக்கு மாகாணம், பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - மண்முனை தென்மேற்கு மற்றும் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - மண்முனைப்பற்று ஆகிய திணைக்களங்களில் உயர் பதவிகளில் தனது சேவையினையாற்றிய இவர் தற்போது மண்முனைமேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்வது பெருமைமிக்க விடயமாகும். இருப்பினும் சிறந்த ஆளுமை மற்றும் தலைமைத்துவம் கொண்ட எமது பிரதேச செயலாளர் அவர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வது மண்முனைப்பற்று பிரதேசத்திற்கும் பிரதேச செயலகத்திற்கும் பாரிய இழப்பாகும் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மையே..!!!
2024.01.05 Picture2
2024.01.05 Picture3
2024.01.05 Picture4
2024.01.05 Picture5

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top