போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் வெளிக்கள உத்தியோகத்தர்களின் பங்கு எனும் தலைப்பில் சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் 2024.01.22 ஆம் திகதி திங்கட்கிழமையன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. லோகினி விவேகானந்தராஜ் கலந்து கொண்டதோடு, நிகழ்வின் வளவாளராக களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் திரு.மு.புவனேந்திரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














