கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரச உத்தியோகத்தர்களின் பல்துறைசார் ஆளுமையினை விருத்தி செய்யும் நோக்கில் நடத்திய மாகாண மட்ட பாடல் போட்டியில் பங்குபற்றி சிறப்பாக தன் பாடும் திறமையினை வெளிக்காட்டி கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கிழக்கின் கான இளவரசன் என்ற பட்டத்தினைப் பெற்று எமது பிரதேச செயலகத்திற்கு பெருமையினை பெற்றுத்தந்த எமது பிரதேச செயலக உளவள துணை உத்தியோகத்தர் திரு. தருமரெத்தினம் நிஷாந்தன் அவர்களுக்கு பிரதேச செயலகம் சார்பாக எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்
WhatsApp Image 2023 10 07 at 20.23.30
WhatsApp Image 2023 10 08 at 12.19.54 1
WhatsApp Image 2023 10 07 at 20.23.31
2023.10.04 01
மண்முனைப்பற்று பிரதேச செயலகம் நடாத்தும் சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வு 2023.10.04 ஆம் திகதி புதன்கிழமை இன்று மு.ப 9.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்" மற்றும் "மாறிவரும் உலகிற்கேற்ப முதியோர் தம்மை தயார்படுத்திக் கொள்ளல்" எனும் தொனிப்பொருள்களுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருமதி. சு.ஸ்ரீகாந்த், மேலதிக மாவட்ட செயலாளர், மாவட்ட செயலகம், மட்டக்களப்பு அவர்களும் சிறப்பு அதிதிகளாக திரு. சி.புவனேந்திரன், மாவட்ட பணிப்பாளர், சமுர்த்தி திணைக்களம், மட்டக்களப்பு, Dr. சாபீர், வைத்திய அதிகாரி, சித்த ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு, திரு. வே.குணராஜசேகரம், பொறுப்பு வைத்திய அதிகாரி, பிரதேச வைத்தியசாலை, ஆரையம்பதி, திரு. யோ.சர்வேஸ்வரன், செயலாளர், பிரதேச சபை, ஆரையம்பதி ஆகியோரும் கௌரவ அதிதிகளாக சி.தங்கவடிவேல், தலைவர், பிரதேச மட்ட முதியோர் சம்மேளனம், மண்முனைப்பற்று, சி.தேவரூபன், தலைவர், பிரதேச சிறுவர் சபை, மண்முனைப்பற்று ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், சிறார்கள், முதியோர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன் இந்நிகழ்வில் பங்குபற்றிய சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023.10.04 09
2023.10.04 10
2023.10.04 02
2023.10.04 04
2023.10.04 03
2023.10.04 06
2023.10.04 05
2023.10.04 07
2023.10.04 08
2023.10.04 11
2023.10.04 12
மண்முனைப்பற்று பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஒன்றுகூடல் மற்றும் சேவை நலன் பாராட்டு வைபவம் 2023.10.08 ஆம் திகதி புல்லுமலை Yuhi Buhi Forest Resort இல் நலன்புரிச் சங்க உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.
இதன் போது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த உத்தியோகத்தர்களது சிறார்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் கடந்த 2023.10.03 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற பிரபல உத்தியோகத்தர் தெரிவிற்கான தேர்தலில் வெற்றியீட்டிய திரு.ஏ.பாஸ்கரன் அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறார்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு அதில் வெற்றியீட்டிவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023.10.09 01
2023.10.09 02
2023.10.09 03
2023.10.09 04
2023.10.09 05
2023.10.09 06
2023.10.09 07
2023.10.09 08
2023.10.09 09
2023.10.09 10
2023.10.09 11
2023.10.09 12
மண்முனைப்பற்று பிரதேச செயலக வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்விற்கான பிரபல உத்தியோகத்தர் தெரிவிற்கான தேர்தல் 2023.10.03 ஆம் திகதி செவ்வாய்கிழமை இன்று மு.ப 9.30 தொடக்கம் பி.ப 1.00 மணி வரையான காலப்பகுதியில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த தேர்தலில் 02 பெண் வேட்பாளர்கள் மற்றும் 01 ஆண் வேட்பாளர் உட்பட மூவர் போட்டியிட்டிருந்தனர். வெற்றியீட்டிய பிரபல உத்தியோகத்தரிற்கான கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் வருடாந்த ஒன்றுகூடலின் போது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2023 10 03 at 10.38.45 1
WhatsApp Image 2023 10 03 at 10.38.45 4
WhatsApp Image 2023 10 03 at 10.38.45 5
WhatsApp Image 2023 10 03 at 09.46.39
WhatsApp Image 2023 10 03 at 09.45.36
WhatsApp Image 2023 10 03 at 09.44.59
WhatsApp Image 2023 10 03 at 11.52.34
WhatsApp Image 2023 10 03 at 11.52.34 1

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top