WhatsApp Image 2023 09 16 at 12.06.09
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இலங்கையின் 15 ஆவது குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு தொடர்பான பயிற்சி வகுப்பானது 2023.09.14 ஆம் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலக நிரற்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புள்ளி விபரவியலாளரும் பிரதி தொகை மதிப்பு அத்தியட்சகருமான T.ஜெய்த்தனன் மற்றும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மேற்பார்வை உத்தியோகத்தர்கள், வட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், நிரற்படுத்தும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இப்பயிற்சி நிகழ்வானது 2023.09.14 ஆம் திகதி தொடக்கம் 2023.09.16 ஆம் திகதி வரை 03 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2023 09 16 at 12.06.09 1
WhatsApp Image 2023 09 16 at 12.16.19 2
WhatsApp Image 2023 09 16 at 12.12.00 1
WhatsApp Image 2023 09 16 at 12.19.41 1
Banner 2023.09.10
கலைக்கழகங்களின் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார பேரவையின் ஆலோசனைக்கு அமைவாக ஒவ்வொரு கலைக்கழகமும் மாதம் ஒருமுறை ஒவ்வொரு நிகழ்வினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கதிரவன் கலைக்கழகத்தினால் மண்முனைப்பற்று பிரதேச கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வு மட்/தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அமைந்துள்ள மீனாட்சி மரத்தடி முன்றலில் 10.09.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந. சத்தியானந்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்ததுடன் மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளர், கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள், கலாசார பேரவை உறுப்பினர்கள், கதிரவன் பட்டிமன்ற பேரவை உறுப்பினர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்ததுடன் கலைஞர்கள் தங்களது அனுபவப் பகிர்வுடன் சிறப்பான முறையில் தங்களது ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
WhatsApp Image 2023 09 11 at 09.36.06
WhatsApp Image 2023 09 11 at 09.36.08 1
WhatsApp Image 2023 09 11 at 09.36.14
WhatsApp Image 2023 09 11 at 11.51.52
அவுஸ்ரேலிய சைவ மன்றம் நன்கொடையாக வழங்கிய நிதியினைக் கொண்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 10 பயனாளிகளுக்கு குடிநீர் பெற்றுக்கொள்வதற்கான குழாய்கிணறுகளை நிர்மாணித்து சம்பிரதாயபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு 2023.09.06 ஆம் திகதி புதன்கிழமையன்று இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்கள் கலந்து கொண்டு குழாய்க்கிணற்றினை திறந்து வைத்ததுடன் உரிய பயனாளியிடம் ஒப்படைத்தார். அத்துடன் இந்நிகழ்வில் சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் திருமதி. தயனி கிருஸ்ணாகரன், சமூக நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர். மேலும் சமூக நலன்புரி அமைப்பிற்கு அவுஸ்ரேலிய சைவ மன்றமானது வருடாந்தம் மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பதற்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2023 09 11 at 11.58.28
WhatsApp Image 2023 09 11 at 11.58.39

பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்

நடமாடும் சேவை

காலம்: 2023.09.23 ஆம் திகதி சனிக்கிழமை

நேரம்: மு.ப 9.00 - பி.ப 4.00 வரை

இடம்: மட்/மட்/ மாவிலங்கதுறை விக்னேஸ்வரா வித்தியாலயம்

வழங்கப்படும் சேவைகள்:

1. பிரதேச செயலகம் சார்ந்த பொதுமக்கள் சேவைகள்

2. சுகாதார வைத்திய அலுவலகம் சார்ந்த சேவைகள்

3. சுதேச மருத்துவ சேவைகள் 

4. ஆயுள்வேத வைத்தியம் தொடர்பான சேவைகள்

தகவல்:


பிரதேச செயலாளர் 

பிரதேச செயலகம்

மண்முனைப்பற்று.

Mobile Service September

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top