WhatsApp Image 2023 08 24 at 10.32.59 1
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி நடாத்தும் விழிப்புணர்வு நிகழ்வு, அங்கீகரிக்கப்படாத முறையில் வைப்புப் பெறலும் நிதித் தொழிலை நடாத்துதலும் எனும் தொனிப்பொருளில் 2023.08.24 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.00 - பி.ப 12.30 மணி வரை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் திரு. க.பிரபாகரன், கிழக்கு பிராந்திய முகாமையாளர், இலங்கை மத்திய வங்கி, திருகோணமலை மற்றும் வளவாளராக திரு. சண்.குறிஞ்சிதரன், பிரதி பணிப்பாளர், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் இந்நிகழ்வின் பங்குபற்றுனர்களாக மண்முனைப்பற்று பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2023 08 24 at 10.32.56
WhatsApp Image 2023 08 24 at 10.32.56 1
WhatsApp Image 2023 08 24 at 10.32.56

பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்

நடமாடும் சேவை

காலம்: 2023.08.26 ஆம் திகதி சனிக்கிழமை

நேரம்: மு.ப 9.00 - பி.ப 4.00 வரை

இடம்: மட்/ கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயம்

வழங்கப்படும் சேவைகள்:

1. பிரதேச செயலகம் சார்ந்த பொதுமக்கள் சேவைகள்

2. சுகாதார வைத்திய அலுவலகம் சார்ந்த சேவைகள்

3. சுதேச மருத்துவ சேவைகள் 

4. ஆயுள்வேத வைத்தியம் தொடர்பான சேவைகள்

 

தகவல்:


பிரதேச செயலாளர் 

பிரதேச செயலகம்

மண்முனைப்பற்று.

Mobile Service August

மண்முனைப்பற்று பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 2023.07.11 ஆம் திகதி செவ்வாய்கிழமை பி.ப 2.30 மணிக்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ சி.சந்திரகாந்தன் அவர்களது தலைமையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023.07.11 DCC

கமத்தொழில் அமைச்சினால் வழங்கப்பட்ட பயறு அறுவடை நிகழ்வு 2023.07.31 ஆம் திகதி திங்கட்கிழமையன்று கிரான்குளம் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

2023.07.31

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top