WhatsApp Image 2023 03 29 at 15.13.03
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் பகுதியில் தீயினால் வீடு முற்றாக எரிந்து சாம்பலாகிய குடும்பத்திற்கான புதிய வீட்டினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2023.03.24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சுபவேளையில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இரவு வேளையில் குறித்த பகுதியில் வசித்து வந்த குடும்பத்தின் வீடு திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் வசிப்பதற்கு இடம் இல்லாது பரிதவித்து வந்த குடும்பத்திற்காக நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2023 03 29 at 15.13.02 1WhatsApp Image 2023 03 29 at 15.13.02
WhatsApp Image 2023 03 29 at 15.13.00 2
WhatsApp Image 2023 03 29 at 15.12.59
 

அல்றா அலுமினியம் நிறுவனத்தின் (Ultra Aluminium (Pvt) Ltd) அனுசரணையுடன் 23 G.C.E A/L விஞ்ஞான, கணித மற்றும் வணிக பிரிவு மாணவர்களுக்கு January மற்றும் February ஆகிய இரண்டு மாதங்களுக்கான தலா ரூபாய் 2000.00 கொடுப்பனவு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் 2023.03.22 ஆம் திகதி காலை 10.15 மணிக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 03 22 at 11.45.12

WhatsApp Image 2023 03 22 at 11.45.10

WhatsApp Image 2023 03 22 at 11.45.11

 

2023.03.26 02 1024x576மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டம் 2023.03.26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் கிரான்குளம் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் 9301 குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு தலா 10kg அரிசி வீதம் March மற்றும் April மாதங்களுக்கான அரிசி வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு. S.புவனேந்திரன், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. M.ஜெயசந்திரன், தாளங்குடா வலய சமுர்த்தி முகாமையாளர் திரு. U.சம்சுதீன், கிரான்குளம் தெற்கு கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023.03.26 01 1024x576
2023.03.26 03 1024x576
2023.03.26 04 1024x5762023.03.26 05 1024x576
2023.03.27 01
 
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் சௌபாக்கியா விசேட வீட்டுத்திட்டம் மற்றும் சமுர்த்தி லொத்தர் வீட்டுத்திட்டங்களை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு 2023.03.14 ஆம் திகதி செவ்வாய்கிழமை அன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு. S.புவனேந்திரன், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி. P.கலைவாணி, மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. M.ஜெயசந்திரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி. S.F.R.பரீட், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் சௌபாக்கியா விசேட வீட்டுத்திட்டம் மற்றும் சமுர்த்தி லொத்தர் வீட்டுத்திட்டங்கள் புதுக்குடியிருப்பு, இராஜதுரைக்கிராமம் மற்றும் செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
2023.03.27 02
2023.03.27 04
2023.03.27 06
2023.03.27 08

"டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" எனும் தொனிப்பொருளில் (DigitALL: Innovation and Technology for Gender Equality) மகளிர் தின நிகழ்வானது மண்முனைப்பற்று சிறுவர் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் 08.03.2023 ஆம் திகதி புதன்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காலை நிகழ்வுகளாக மகளிர் சங்கங்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும், சூரியா பெண்கள் அமைப்பினால் வீதி நாடகமும் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி விற்பனையில் பற்கேற்ற மகளிர் சங்க உறுப்பினர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்தும் மகளிர் சங்க உறுப்பினர்கள் இருவருக்கு தலா 5 வாழைக்கன்றுகள், 5 மாதுளங்கன்றுகள் வீதம் வழங்கி அவர்களது வீடுகளில் நடுகை செய்யப்பட்டது. கோவில்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்ற மரநடுகை வைபவத்தில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். மேலும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான மற்றுமொரு மகளிர் தின நிகழ்வு பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 03 08 at 18.13.50 2 1024x576

WhatsApp Image 2023 03 08 at 18.13.50 1 1024x576

WhatsApp Image 2023 03 08 at 18.15.25 3 1024x576

WhatsApp Image 2023 03 08 at 18.15.25 2 1024x576

WhatsApp Image 2023 03 08 at 18.16.37 11 1024x576

WhatsApp Image 2023 03 08 at 18.17.49 5 1024x576

WhatsApp Image 2023 03 08 at 18.21.58 7 1024x576

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top