
மண்முனைப்பற்று பிரதேச செயலகம் நடாத்தும் சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வு 2023.10.04 ஆம் திகதி புதன்கிழமை இன்று மு.ப 9.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்" மற்றும் "மாறிவரும் உலகிற்கேற்ப முதியோர் தம்மை தயார்படுத்திக் கொள்ளல்" எனும் தொனிப்பொருள்களுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருமதி. சு.ஸ்ரீகாந்த், மேலதிக மாவட்ட செயலாளர், மாவட்ட செயலகம், மட்டக்களப்பு அவர்களும் சிறப்பு அதிதிகளாக திரு. சி.புவனேந்திரன், மாவட்ட பணிப்பாளர், சமுர்த்தி திணைக்களம், மட்டக்களப்பு, Dr. சாபீர், வைத்திய அதிகாரி, சித்த ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு, திரு. வே.குணராஜசேகரம், பொறுப்பு வைத்திய அதிகாரி, பிரதேச வைத்தியசாலை, ஆரையம்பதி, திரு. யோ.சர்வேஸ்வரன், செயலாளர், பிரதேச சபை, ஆரையம்பதி ஆகியோரும் கௌரவ அதிதிகளாக சி.தங்கவடிவேல், தலைவர், பிரதேச மட்ட முதியோர் சம்மேளனம், மண்முனைப்பற்று, சி.தேவரூபன், தலைவர், பிரதேச சிறுவர் சபை, மண்முனைப்பற்று ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், சிறார்கள், முதியோர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன் இந்நிகழ்வில் பங்குபற்றிய சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.























