மாவிலங்கதுறை சிவில் பாதுகாப்பு குழு மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து நடாத்திய இரத்த தான நிகழ்வு 2024.08.04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 1.30 மணி வரை மாவிலங்கதுறை கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் கலந்து கொண்டிருந்ததுடன் 32 கொடையாளிகளினால் இரத்த தானம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024.08.04 Picture 1280x540

 

மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய ஆடிக் கூழ் நிகழ்வானது 2024.08.09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.00 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலக சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024.08.09 Picture

 

ஆரையம்பதி மேற்கு கிராம சேவகர் பிரிவில் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் ஆரம்பிப்பதற்கான கூட்டம் 25.06.2024 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு ஆரையம்பதி மேற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள கல்வீட்டுத் திண்ணையடி பரமநயினார் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரையம்பதி மேற்கு கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

2024.06.25 Picture

மண்முனைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம் என்னும் நிகழ்வு 25.06.2024 ஆம் திகதி ஆரையம்பதி கிழக்கு மட்/மம/ ஹைராத் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார். மற்றும் இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், மட்/மம/ ஹைராத் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், உளவள துணை உதவியாளர், போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளர்கள் அவர்களினால் பாடசாலை வளாகத்தினுள் மரக்கன்று நடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

2024.06.25 Picture 1

மண்முனைப்பற்று பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் கமத்தொழில் அமைச்சினால் மானியமாக வழங்கப்பட்ட பயறு அறுவடை நிகழ்வானது விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்குபடுத்தலுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 2024.06.19 ஆம் திகதி புதன்கிழமை இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகெளரி தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விவசாய போதனாசிரியர், கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மேட்டுநில கமநல அமைப்பு, விவசாயிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024.06.19 Picture

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top