2024.10.01 ChildrensDay Banner
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வானது "பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக நடாத்துவோம்" மற்றும் "வலுவான பராமரிப்பு மற்றும் ஆதரவுடன் முதியோர்களை கௌரவப்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் 2024.10.01 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாவிலங்கதுறை கிராம உத்தியோகத்தர் பிரிவின் பற்றிமாபுரம் இளவேனில் விளையாட்டு மைதானத்தில் பி.ப 3.00 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் அதிதிகளாக பிரதேசத்தின் சிறுவர்களும் முதியோர்களும் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். அத்தோடு சிறுவர்களின் பல்வேறான கலைநிகழ்ச்சிகளும் முதியோர்களின் ஆடல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்று சிறுவர்களின் ஆக்கங்களுடனான நான்காவது ஊற்று கையெழுத்துச் சஞ்சிகையும் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், ஆரையம்பதி சுகாதார வைத்திய அலுவலக சிரேஷ்ட பொதுசுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.10.01 Capture 01
2024.10.01 Capture 02
2024.10.01 Capture 03
2024.09.11 Blood Donation Banner
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி அனுசரணையுடன் இரத்த தான நிகழ்வானது 2024.09.11 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.00 மணி தொடக்கம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு உயிர் காக்க உதிரம் கொடுத்து இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.09.11 Capture 1
2024.09.11 Capture 2
2024.09.11 Capture 3

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக காடாக்கும் நிகழ்வு 2024.08.28 ஆம் திகதி புதன்கிழமை இன்று மு.ப 8.45 மணியளவில் புதுக்குடியிருப்பு தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், வெளிக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சங்கங்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் இதன் போது 2500 பனம் விதைகள் நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024.08.28 Picture

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் தொழுநோய்க்கான நடமாடும் பரிசோதனை மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 2024.08.17 ஆம் திகதி சனிக்கிழமையன்று மு.ப 8.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024.08.17 Picture

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் 2024.08.12 ஆம் திகதி திங்கட்கிழமையன்று மரக்கன்று வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பரமநயினார் இளைஞர் கழகத்தினால் மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024.08.12 Picture

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top