மண்முனைப்பற்று பிரதேச செயலகம், கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் மற்றும் பிரதேச இளைஞர் சம்மேளனம் இணைந்து நடாத்திய பிரதேச மட்ட விளையாட்டு விழா 2024.05.31 ஆம் திகதி பி.ப 3.30 மணிக்கு பாலமுனை முஹைதீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைத்தலுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனை தொடர்ந்து மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டு அதிதிகளால் மங்கல விளக்கேற்றப்பட்டது. மேலும் மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டு தொடர்ந்து காங்கேயனோடை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் பாலமுனை முகைதீன்ஸ் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. J.J.முரளிதரன் அவர்களும் விசேட அதிதிகளாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. V.குணராஜசேகரம், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி Dr. T.திலக் ஷன், பாலமுனை பிரதேச வைத்திய அதிகாரி Dr. S.கிரிதரன், மண்முனைப்பற்று பிரதேச சபை செயலளர் திரு. J.சர்வேஸ்வரன் மற்றும் சிரேஸ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு. V.ஈஸ்பரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்ததுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. L.விவேகானந்தராஜ், கணக்காளர் திரு. V.நாகேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு. S.திவாகரன், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் திரு. J.A.சுரேஸ், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றிபெற்ற ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கான சிறப்பு விருதுகளும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














