"வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை" என்ற தொனிப்பொருளின் கீழ் 2024 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகம் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வருடத்தின் முதன் நாளான 2024.01.01 ஆம் திகதி திங்கட்கிழமை இன்று மு.ப 8.40 மணிக்கு அனைத்து உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
மேற்படி நிகழ்வில் தேசிய கொடி ஏற்றல் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச சேவை சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டனர். மேலும் ஒரு நிமிட மௌன இறை வணக்கம் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. அத்துடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு இந்நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.
2024.01.01 Pic 01
 2024.01.01 Pic 02

2004 ஆம் ஆண்டு சுனாமி இடம்பெற்று 19 வருடங்கள் நிறைவு தினத்தினை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் தலைமையில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலக வளாகத்தில் 2023.12.26 ஆம் திகதி செவ்வாய்கிழமை அன்று மு.ப 9.20 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் சுனாமி அனர்த்தத்தின் போது உயிர்நீத்தவர்களுக்கு இரு நிமிட மௌன அஞ்சலியைப் தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்களால் நிகழ்வு தொடர்பான உரை இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. அத்துடன் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுமுள்ள மத தலங்களிலும் பிரார்த்தனையும் விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது.

2023.12.26 Pic

2023.12.17 01
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் மாவிலங்கத்துறை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயமும் மாவிலங்கத்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையும் இணைந்து நடத்திய தெய்வீக கிராம நிகழ்வானது 17.12.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.30 மணிக்கு மாவிலங்கத்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச அறநெறி பாடசாலை மாணவர்களின் ஊர்வலம், கோமாதா பூசை, மரநடுகை நிகழ்வு, சைவப்புலவர் J.கஜேந்திரா அவர்களின் சிறப்பு சொற்பொழிவு, பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் எனப்பல நிகழ்வுகள் இந்நிகழ்வை அலங்கரித்தன.
தொடர்ந்து அறநெறி பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஆக்கத்திறன் போட்டியில் பிரதேச ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் இறுதியில் நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வை கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் ஒழுங்குபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.
2023.12.17 02
2023.12.17 03
2023.12.17 04
2023.12.17 05
2023.12.17 06
2023.12.17 07
2023.12.17 08
இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய வாரத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. N. சத்தியானந்தி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 2023.12.14 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று உதவி பிரதேச செயலாளர் திருமதி. L. விவேகானந்தராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரதேச செயலக வளாகத்தினுள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் துரித எண் (Hotline) குறிப்பிடப்பட்ட பதாதைகள் கிளைகள் ரீதியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2023 12 19 at 03.50.59 1
2023.12.18 Pic
 
WhatsApp Image 2023 12 12 at 04.27.12 1
உத்தியோகத்தர்களின் மன அழுத்தங்களை போக்கி அனைவரும் மகிழ்ச்சியான முறையில் தங்களது கடமைகளை நிறைவேற்றும் வகையில் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய இசையும் இரசனையும் நிகழ்வானது 2023.12.11 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று பிற்பகல் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசத்தின் மூத்த கலைஞரும், கண்டி வெல்வூட் நுண்கலைக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் இலங்கை கலைக்கழகத்தின் நீண்டகால நிறைவேற்று அதிகார உறுப்பினராகவும் இலங்கை வானொலி மற்றும் ரூபவாஹினியில் பாடகராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்ற பாடகர் சங்கீதவேதி, கலைவாணன் திரு. விஸ்வநாதன் சதானந்தம் அவர்கள் வளவாளராக கலந்து சிறப்பித்தார்.
இசையானது எவ்வாறு ஒரு மனிதனை ஆட்கொள்கின்றது என்பதனை பல தத்துவ பாடல்களூடாகவும் கதைகளினூடாகவும் தனது கருத்துக்களை சிறப்பான முறையில் வழங்கினார். இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பாடல்களும் இடம்பெற்றது. இந் நிகழ்வினை பிரதேச செயலக கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2023 12 12 at 04.27.12
WhatsApp Image 2023 12 12 at 04.27.13 1
WhatsApp Image 2023 12 12 at 04.27.13
WhatsApp Image 2023 12 12 at 04.27.14
WhatsApp Image 2023 12 12 at 04.27.11

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top