பதின்ம வயதினருக்கான பயிற்சிப் பட்டறை
எமது பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார உத்தியோகத்தர்களின் தலைமையில் பதின்ம வயதினருக்கான பயிற்சிப்பட்டறையானது ஓரு குழந்தைக்கு கல்வி புகட்டு இந்து நரசிம்மர் அறநெறிப்பாடசாலை, சூபி மன்ஸ_ல் குர்ஆன் மதரசா பாடசாலை மற்றும் பத்திமா ஞாயிறு பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் 75 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் 17.05.2025 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு எமது பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
.pic 2pic-1.png

மங்கையற்கரசியார் குரு பூசை தினம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மங்கையற்கரசியார் குரு பூசை தின நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்து கலாசார உத்தியோகத்தரின் தலைமையில் செல்வாநகர் கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஒரு குழந்தைக்கு கல்வி புகட்டு இந்து நரசிம்மர் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றதலுடன் 2025.05.18ஆந்திகதி மு.ப 9.00 மணிக்கு இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் மங்கையற்கரசியார் குரு பூசை தினம் பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டது. பின்பு மாணவர்களுக்குசிற்றுண்டி வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

Pic

 

திருநாவுக்கரசு நாயனார் குரு பூசை தினம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் தாழங்குடா விநாயகர் அறநெறி பாடசாலையில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசையானது 2025.04.27 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வானது தாழங்குடா காளியம்மன் ஆலயத்திலிருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாகி மட்/ விநாயகர் வித்தியாலயத்தின் ஊடாக விநாயகர் அறநெறிப்பாடசாலையை வந்தடைந்தது. பின்பு கலை நிகழ்வுகள், சிறப்பு சொற்பொழிவு என்பன இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

CaptureCapture2

கலைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கல்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் கலைஞர்களுக்கான உதவித்தொகையானது 15.05.2025ஆம் திகதி வியாழக்கிழமை அன்று எமது பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் எமது பிரதேச செயலாளர் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஆகியோரால் பத்து கலைஞர்களுக்கு பத்தாயிரம் ரூபா வீதம் மொத்தமாக ஒரு இலட்சம் ரூபா பணத்தொகை வழங்கி வைக்கப்பட்டது.
Capture
சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை 2025
எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எமது மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும் விற்பனை சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டு 2025.04.09ஆம் திகதி புதன்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. எமது நிருவாக உத்தியோகத்தர் திரு.சி.திவாகரன் ஐயா அவர்களினால் திறந்துவைக்கப்பட்ட இந்நிகழ்வானது ஆரையம்பதி பிரதான வீதியில் அமைந்துள்ள சிறு கைத்தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.
market 1
market 2
market 3
 

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top