News




பிரதேச மட்ட கண்காட்சி
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 30.07.2025 ம் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தாழங்குடா மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலைய மாணவர்களின் பிரதேச மட்ட கண்காட்சி நடைபெற்றது.
இதில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,சிரேஷ்ட தையல் போதனாசிரியை மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக கணக்காளர்,நிருவாக உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







கிழக்கு மாகாண குறும்பட தயாரிப்பு நிகழ்ச்சி (மட்டக்களப்பு மாவட்டம்) - 2025


தேசிய பிறப்பு சான்றிதழ் நிகழ்வு
மேற்படி நிகழ்வானது 30.07.2025(புதன் கிழமை) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். மேலும் இந் நிகழ்வில் தேசிய அடையாள அட்டை இலக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















