மண்முனைப்பற்று கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கலந்துரையாடல் இன்று 19.05.2020 ஆந் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மு.ப 11.00 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்றது.
சுகாதார முறைகளைப் பின்பற்றியவாறு நடைபெற்ற இக் கலந்துரையாடலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு.ஏ.துமிந்தநளனசிறி, ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி கே.ரமேஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்ட இக் கலந்துரையாடலின் போது கொரோனா தொற்றிலிருந்து மண்முனைப்பற்று பிரதேச மக்களை எவ்வாராக தொடர்ந்தும் பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இவ்வாறான அசாதாரண சூழ்நிலையின் போது பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும், ஆலயங்கள் மற்றும் பள்ளிவாயல்களின் எவ்வாறாக நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாகவும், டெங்கு நிலை தொடர்பில் பொது மக்களை எவ்வாறாக வழிநடத்த வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கொரோனா சூழ்நிலையில் மக்களுக்காக பணியாற்றிவரும் இராணுவ உயரதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஏனைய திணைக்களகங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
 
 
 
 

மண்முனைப்பற்று கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கலந்துரையாடல் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம், ஆரையம்பதி பொது சுகாதார அதிகாரி வைத்தியர் கே.ரமேஸ் உள்ளிட்ட படை அதிகாரிகள், சுகாதார துறையினர் மற்றும் பிரதேச வர்த்த சங்கத்தினர் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

சமூக இடைவெளியை பின்பற்றிய வகையில் சுகாதார முறைப்படி இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது பிரதேச மக்கள் மற்றும் வியாபாரிகளது நலனினை கருத்திற்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கக் கூடிய வகையிலான பல்வேறுபட்ட முடிவுகள் இதன்போது எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச செயலகத்துக்கு வருகை தரும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான ஏற்பாடுகள் எமது பிரதேச செயலகத்தின் பிரதான வாயிலில் இன்றிலிருந்து இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மாவட்ட செயலகத்தின் ஆலோசனைக்கு அமைவாக எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது வழிகாட்டலில் இடம்பெறவுள்ளது.

இந்த நடைமுறையானது தொடர்ச்சியாக தினமும் அலுவலக வாயிலில் இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

களுதாவளை பிரதேசத்தில் செய்கைபண்ணப்பட்ட மரக்கறி வகைகள் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்றைய தினமும் விநியோகிக்கப்படவுள்ளது.

எனவே வியாபாரிகள் வருகைதந்து பெற்றுக் கொள்ளலாம் என அறியத்தருகின்றோம்.

1 - பயற்றை

2 - கத்தரி

 

 

 

 

News & Events

21
Oct2026
நலம் நல்கும் நவராத்திரி விழா - 2026 

நலம் நல்கும் நவராத்திரி விழா - 2026 

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகெளரி...

Scroll To Top