"முதியோர்களான உங்களுக்கு சிறந்த இடத்தினை வழங்கும் நாளைய தினத்தினை நோக்கி" எனும் தொனிப்பொருளில் மண்முனைப்பற்று பிரதேச செயலகம் முதியோரை கௌரவிக்கும் நோக்கில் நடாத்திய சர்வதேச முதியோர் தின விழா கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக உதவிப்பிரதேச செலலாளர் திருமதி.விவேகானந்தராஜா லோகினி தலைமையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட கண்கவர் நிகழ்வுகளையும், சிரேஸ்ட பிரஜைகளை அதிதிகள் கௌரவிப்பதையும், நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம்.

 

மண்முனைப்பற்று பிரதேசத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வானது  (05) திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதன்போது நிகழ்வினை அலங்கரித்த சிறார்களின் கலை நிகழ்வுகளையும்,  அதிதிகளினால் சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கிவைப்பதனையும், சிறுவர் கழகத்தினால் ஊற்று சஞ்சிகை வெளியிட்டு வைப்பதனையும் படங்களில் காணலாம்.

DSCN9602

DSCN9615

DSCN9605

DSCN9636

WhatsApp Image 2019 10 05 at 12.59.11 PM

WhatsApp Image 2019 10 05 at 12.59.12 PM

WhatsApp Image 2019 10 05 at 12.59.15 PM

WhatsApp Image 2019 10 05 at 12.59.17 PM

 

ஜனாதிபதி செயலகத்தில் செயற்படுத்தபடும் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கருத்திட்டத்தின் கீழ் மாவட்ட வாழ்கைத் தொழில் மத்திய நிலையங்களை நிறுவும் பணி தொடர்பாக எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் நிலையங்களில் பதிவு செய்து CAREERKEY TEST செய்வதன் மூலம் அவர்களது துறைகளை எவ்வாறு தெரிவு செய்யலாம் எனவும் இதன்போது கூறப்பட்டது.
மாவட்ட செயலக தொழில்வழிகாட்டல் நிலைய உத்தியோகத்தர்களால் இக்கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

எமது பிரதேச செயலாளரின் ஆலோசனையின் பேரில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிற்கிடையே கலைத்திறனை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன் முதல் நாள் நிகழ்வு 16.09.2019 திங்கட்கிழமை பி.ப 3 மணிக்கு எமது செயலக மாநாட்டு மண்டபத்தில் எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சந்தியானந்தி அவர்களது தலைமையில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் நிர்வாக பிரிவின் Smile தரவளையமும், கலாசார பிரிவின் வீணை தரவளையமும் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன் போது எமது செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களினால் வெளிப்படுத்திய கலைத்திறமைகளை கண்டுகளித்தது மட்டுமல்லாமல் இவ்வாறான திட்டத்தினை அமுல்படுத்த அனுமதியளித்த பிரதேச செயலாளருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.

நாளாந்தம் வேலைப்பளுக்களின் மத்தியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் மனச்சோர்வை போக்கி மகிழ்ச்சியான அலுவலக சூழலை உருவாக்கும் முயற்சியாகவே ஒவ்வொரு மாதமும் வரும் 3 வது திங்கட்கிழமை மாலை வேளையில் குறித்த கலை நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்துக்களை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று மண்முனைப்பற்றில் நடைபெற்றது.                      

எமது பிரதேச செயலக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது வழிகாட்டலின் கீழ் விபத்துக்களை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று 23.07.2019 மாவிலங்கத்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.          

இச் செயலமர்விற்கு வளவாளராக எமது பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின்  பதவிநிலை உத்தியோகத்தர் திருமதி ஜாஹிதா ஜலால்தீன் அவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வினை ஏற்படித்தியிருந்ததுடன், மாவிலங்கத்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கான மகளிர் சங்கத்தின் அங்கத்தவர்கள் இதன்போது பங்குபற்றி பயன்பெற்றிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

2019 07 23 woman child awarnas programme 2

 

 

2019 07 23 woman child awarnas programme 3

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top