கலைஞர் சுவதம்
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட 15000 ரூபாய் பணத்திலிருந்து ஒரு கலைஞருக்கு 5000ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் கலாசார உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் கலைஞர்களின் வீடு சென்று 06.08.2025 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
WhatsApp Image 2025 08 07 at 15.52.10
WhatsApp Image 2025 08 07 at 15.52.091
WhatsApp Image 2025 08 07 at 15.52.09
WhatsApp Image 2025 08 07 at 15.52.08

பிரதேச மட்ட கண்காட்சி


மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 30.07.2025 ம் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தாழங்குடா மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலைய மாணவர்களின் பிரதேச மட்ட கண்காட்சி நடைபெற்றது.
இதில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,சிரேஷ்ட தையல் போதனாசிரியை மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக கணக்காளர்,நிருவாக உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

WhatsApp Image 2025 07 31 at 10.15.24

WhatsApp Image 2025 07 31 at 10.15.291

WhatsApp Image 2025 07 31 at 10.15.55

WhatsApp Image 2025 07 31 at 10.15.35

WhatsApp Image 2025 07 31 at 10.15.30

WhatsApp Image 2025 07 31 at 10.15.28

WhatsApp Image 2025 07 31 at 10.15.27

கிழக்கு மாகாண குறும்பட தயாரிப்பு நிகழ்ச்சி (மட்டக்களப்பு மாவட்டம்) - 2025

Short Film Producing Screening PSDG 2025 page 0010

Short Film Producing Screening PSDG 2025 page 0011

தேசிய பிறப்பு சான்றிதழ் நிகழ்வு 

மேற்படி நிகழ்வானது 30.07.2025(புதன் கிழமை) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மண்முனைப்பற்று  பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். மேலும் இந் நிகழ்வில் தேசிய அடையாள அட்டை இலக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

WhatsApp Image 2025 07 31 at 08.51.471

WhatsApp Image 2025 07 31 at 08.51.441

WhatsApp Image 2025 07 31 at 08.51.47

இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - 2025
 
மண்முனைபற்று பிரதேச செயலகத்தின் 2025 ம் ஆண்டிற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது இன்று (2025.06.27) மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கெளரவ.கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதேச செயலாளர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்குபற்றினர்.
 
 
WhatsApp Image 2025 06 27 at 16.53.281WhatsApp Image 2025 06 27 at 16.53.271WhatsApp Image 2025 06 27 at 16.53.27WhatsApp Image 2025 06 27 at 16.53.26

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top