ஆரையூர் பகல் பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளி திறந்துவைப்பு.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஊடாக உலக வங்கியின் அனுசரணையுடன் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி செயற் திட்டத்தின் மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில் எமது பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட "ஆரையூர் பகல் பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளி " 23. 09.2025 அன்று அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளிதரன் அம்மணி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் முற்பகல் 9.30 மணி அளவில் இடம்பெற்றது இந்நிகழ்வில் மாவட்ட செயலக பொறியியலாளர், மட்டக்களப்பு கல்வி வலையத்தின் உதவி கல்வி பணிப்பாளர், மற்றும் மாவட்ட செயலக முன்பள்ளி பருவ இணைப்பாளர், பிரதேச செயலக நிர்வாகத் உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தர், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2025 09 24 at 20.14.45WhatsApp Image 2025 09 24 at 20.14.43WhatsApp Image 2025 09 24 at 20.14.47WhatsApp Image 2025 09 24 at 20.14.46WhatsApp Image 2025 09 24 at 20.14.44
SEIRI வாரம் செயற்படுத்தல்
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 02.09.2025 SEIRI வாரத்தின் இரண்டாம் நாள் தேவையற்ற பொருட்களை அகற்றி தேவையான பொருட்களை ஒழுங்குபடுத்தும் செயற்பாடு கிளை ரீதியாக இடம்பெற்றது.
 
WhatsApp Image 2025 09 02 at 19.27.25
WhatsApp Image 2025 09 02 at 18.53.14
WhatsApp Image 2025 09 02 at 17.25.41
WhatsApp Image 2025 09 02 at 16.10.54
பாரம்பரிய உணவு முறை நிகழ்வு.
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பணிக்கப்பட்ட பன்னிரண்டு மாத வேலைத் திட்டத்தில் பாரம்பரிய உணவு முறையில் ஒன்றான வயலும் சோறும் நிகழ்வானது 31.08.2025 அன்று தாழங்குடா விநாயகர் அறநெறிப் பாடசாலையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் திருமதி.வளர்மதி ராஜ் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
WhatsApp Image 2025 09 01 at 08.46.04
WhatsApp Image 2025 09 01 at 08.46.05
WhatsApp Image 2025 09 01 at 08.46.08 1
WhatsApp Image 2025 09 01 at 08.46.11 1

 

SEIRI வாரம் செயற்படுத்தல்

எமது  மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 01.09.2025  SEIRI  வாரத்தின் முதலாம் நாளான இன்று வெளிச்சூழலை சுத்தப்படுத்தும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கான Banner எமது பிரதேச செயலாளர் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதில் கணக்காளர் , நிருவாக உத்தியோகத்தர் , உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்கள் ,5S உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும் கிளை ரீதியாக உத்தியோகத்தர்கள் அனைவரும் தங்களுக்குப்பொறுப்பான வெளிச்சூழலை சுத்தம் செய்தனர்.

WhatsApp Image 2025 09 01 at 11.14.451

WhatsApp Image 2025 09 01 at 11.14.45

WhatsApp Image 2025 09 01 at 10.26.25

WhatsApp Image 2025 09 01 at 10.56.11

WhatsApp Image 2025 09 01 at 11.05.08

WhatsApp Image 2025 09 01 at 11.09.35

விவாதப்போட்டி
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பணிக்கப்பட்ட பன்னிரண்டு மாத வேலைத் திட்டத்தில் ஒன்றான உலகை அறிவோம் விவாதம் போட்டி நிகழ்வானது 07.08.2025 அன்று மட்/மட்/ கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் கதிரவன் இன்பராசா அவர்கள் வளவாளராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது இந் நிகழ்வில் 80 பேர் கலந்து கொண்டனர்.
WhatsApp Image 2025 08 07 at 16.02.53
WhatsApp Image 2025 08 07 at 16.02.54
WhatsApp Image 2025 08 07 at 16.02.55

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top