පුවත්
மண்முனைப்பற்று பிரதேச செயலக சர்வதேச சிறுவர் தின முதியோர் வார நிகழ்வு
"உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" "எமது மரியாதைக்குரிய முதியோர்கள்" என்ற தொனிப் பொருளில் 2025.10.03 ஆந் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச முதியோர்களும் சிறுவர்களும் கலந்து சிறப்பித்ததோடு பிரதேச செயலக கணக்காளர், மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக இணைப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர் கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வை சிறப்பிக்க பாலர் பாடசாலை மாணவர்களால் போஷாக்கான உணவுக் கண்காட்சி, சிறுவர் முதியோர்களது கலை நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள், விவாதப் போட்டியின் இறுதிச்சுற்று நடாத்தப்பட்டதுடன் ஊற்று கையெழுத்து சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றதோடு இறுதியாக சான்றிதழ்களும் பங்குபற்றிய சிறுவர் முதியோர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.





உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சி
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நிதி அனுசரணையில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சி 03.10.2024 பிற்பகல் 2.30 மணிக்கு மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் அதிகளவாக காட்சிப்படுத்தப்பட்டதுடன் கலந்து கொண்ட பெண்தொழில் முயற்சியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.





தேசிய வீடமைப்பு அபிவிருத்தி திட்டம்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 2025ம் ஆண்டில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட 04 வீட்டுத்திட்டங்களில் 3 வீடுகள் இன்று கௌரவ பிரதி அமைச்சர் திரு.TB .சரத் நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு அவர்களினால் உத்தியோக பூர்வமாக பயனாளிகளிடம் கையளிப்பு செய்யப்பட்டது. புதுக்குடியிருப்பு தெற்கு தாழங்குடாஇராஜதுரைக்கிராமம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 02.10.2025 அன்று நடைபெற்றதுடன் இதில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு, பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் , தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள், NHDA தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பிரிவுக்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உ்த்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றினார்கள்.





கடற்கரை பூங்கா அடிக்கல் நாட்டு விழா.
எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம சேவகர் பிரிவு கடற்கரையில் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் 100 கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் நிகழ்விற்கான அடிக்கல் நாட்டு விழாவானது 01.10.2025 அன்று இடம்பெற்றது.





நலம் நல்கும் நவராத்திரி விழா 2025
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 2025.10.01 ஆம் திகதி புதன்கிழமை வாணி விழா நிகழ்வானது பக்திப்பெருமிதத்துடனும் கலை நிகழ்வுகளுடனும் ஆன்மீக சொற்ப்பொழிவுகளுடனும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் , கலைமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வரவேற்பு நடனம் , தலைமையுரையுடனான ஆன்மீக சொற்ப்பொழிவு , கலை நிகழ்வுகள் , கலைவாணி கற்றல் உபகரணம் வழங்குதல் என பல்வேறு நிகழ்வுகளும் இவ்விழாவை மேலும் அலங்கரித்தன.













