පුවත්
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வானது 01.10.2026 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப.2.30 மணிக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திரு.கி. இளம்குமுதன், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி திரு.Dr. எஸ். ரவிசந்ரா அத்தோடு மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திரு.க. செந்தில்குமார், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.க. உதயகுமார் அத்தோடு பிரதேசத்தின் முதியோர்கள், சிறுவர்கள் அத்துடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என 500 ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறுவர் முதியோர்களை மகிழ்விக்கும் வகையிலான சிறுவர்களின் நடனங்கள், பேச்சுக்கள், சித்திரப்போட்டி, முன்பள்ளி சிறார்களின் போசாக்கு உணவுக்கண்காட்சியும் விற்பனை சந்தையும் மற்றும் சிறார்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள், முதியோர்களுக்கான பாடல்கள்,விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்தோடு நிகழ்வுகளில் பங்குபற்றிய மற்றும் வெற்றி பெற்ற சிறுவர் முதியோர்களுக்கான பரிசில்களும் முதியோர்களுக்கான கௌரவிப்பும் வழங்கப்பட்டதுடன், அதனுடன் இணைந்த வகையிலாக சமுர்த்தி திணைக்களத்தினால் "சிப்தொர" புலமைப்பரிசில் சான்றிதழ்கள் வழங்கல், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட "திவியட்ட சவிய" திட்டத்தின் இரண்டு பயனாளிகளுக்கு 1 ம் கட்ட வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கான ஒப்புதல் கடிதம் வழங்கல் மற்றும் சமுர்த்தி திணைக்களத்தினால் 11 முன்பள்ளிகளுக்கான ஒலிபெருக்கிகளும் வழங்கப்பட்டது. இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் "அத்தம" தேசிய வேலைத்திட்டம்.
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்ட "அத்தம, " வேலைத்திட்டத்தின் கீழ் கடற்கரை தூய்மைப்படுத்தல் நிகழ்வானது 19.09.2026 அன்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர்,சமுர்த்தி முகாமையாளர், பாதுகாப்பு படை உத்தியோகத்தர்,சுகாதார வைத்திய அதிகாரி,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பிரதேச சபை துப்பரவு பணியாளர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், பொதுமக்கள், சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் வேலைத்திட்டமானது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் 27 கிராம சேவகர் பிரிவுகளிலும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களின் தலைமையில் நடைபெற்றது. அத்துடன் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கான விசேட வேலைத்திட்டமாக புதுக்குடியிருப்பு கடற்கரை துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் இவ் வருடத்திற்கான மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02.09.2026 பிற்பகல் 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கெளரவ கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான
ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், கலாநிதி எம்.எல்.எ.எம் ஹிஸ்புள்ளா மற்றும் இரா சாணக்கியன் ஆகியோருடன் மண்முனைப்பற்று பிரதேச சபையின் பிரதி கௌரவ தவிசாளர், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் மற்றும் அரச திணைக்களங்களின் திணைக்கள தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு திணைக்களங்கள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், 2026ம் ஆண்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் 2026ம் ஆண்டுக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் பிரதேசத்தில் காணப்படும் வைத்தியசாலை கள் மற்றும் கல்வியியல் கல்லூரியில் காணப்படுகின்ற குறைபாடுகள் தேவைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இக்கூட்டமானது இனிதே நிறைவு பெற்றது.




2025/2026 ஆண்டுக்கான விவசாய நடவடிக்கைகள் தொடர்பான பொருளாதாரத் தொகை மதிப்பீட்டுக்கான மண்முனைப்பற்று பிரதேச செயலக கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியானது மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 17.09.2026ஆம் திகதி காலை 9.30மணிக்கு இடம்பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இச்செயற்பாட்டை முறையாக முன்னெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் பயிர்ச்செய்கை, கால்நடை மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களைத் திரட்டுவதற்கான TAB பயன்பாடு மற்றும் தரவு சேகரிப்பு முறைகள் குறித்தும் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு வளவாளர்களாக மாவட்ட செயலக புள்ளி விபரவியல் உத்தியோகத்தரான ஜனாப்.M.I.M.அசீஸ் , புள்ளி விபரவியல் அபிவிருத்தி உத்தியோகத்தரான திரு.பி.பிரசன்னா மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக புள்ளி விபரவியல் உத்தியோகத்தர் திரு.K.தேவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் பயிற்சிநெறியைப்பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர்களாக கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்
02.09.2026 ஆம் திகதியன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச செயலக உள்ளகக் கணக்காய்வு பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு அவதானிப்பாளராக மட்டக்களப்பு தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு அத்தியட்சகர் திரு. ரொபட் அலோசியஸ் அவர்கள் கலந்து கொண்டதுடன் மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு A .S சசிகரன், உதவிப் பிரதேச செயலாளர் திரு K.இளங்குமுதன், கணக்காளர் திரு A. மோகனகுமார், நிர்வாக உத்தியோகத்தர் திரு S. திவாகரன் , கிராம அலுவலகர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் திரு. J. A. சுரேஸ், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள்,பதவி நிலை உதவியாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் நிதி ,நிருவாகம், திட்டமிடல், காணி , சமூக சேவை, சிறுவர் மற்றும் மகளிர், கிராம அபிவிருத்தி, கலாசாரம், விதாதா ஆகிய பிரிவுகள் மற்றும் சமுர்த்தி வங்கிகள்,மகாசங்கம் என்பன தொடர்பான மீளாய்வுகளும் 2026இன் தற்போது வரையான முன்னேற்றங்களும் பிரிவிற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களினால் முன்னளிக்கை மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
பின்னர் கணக்காய்வு. அத்தியட்சகர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் ஆகியோர்களால் ஆலோசனைகளும் கருத்துரைகளும் வழங்கப்பட்டு கூட்டமானது கணக்காளரின் நன்றியுரையுடன் பிற்பகல் 12.45 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.
















