மகா சிவராத்திரி விழா - 2025
மேற்படி சிவராத்திரி விழாவானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் அவர்களது ஆலோசனைக்கமைய 26.02.2025 பி.ப 7.30 மணிக்கு தாழங்குடா கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சேனைத்தெரு ஸ்ரீ வீரம்மா காளியம்மன் ஆலய முன்றலில் மண்முனைப்பற்று பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு. S. திவாகரன் அவர்களின் தலைமையில் இனிதே ஆரம்பமானது.
இவ் விழாவானது ஆலய பிரதம குருவின் ஆசியுடன், நிருவாக உத்தியோகத்தரின் தலைமையுரை, ஆலய நிர்வாகத்தின் உரை என்பனவற்றோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆலய நிருவாகத்தினர், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 200ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
ph 2

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சிகளில் இணைத்துக் கொள்வதற்கான தொழிற்சந்தை நிகழ்வு.

மேற்படி நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் 25.02.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலக ஒருங்கிணைப்பாளரான திரு. மைக்கல் கொலின் அவர்களும் , திரு. ஆனந்த் (மனிதவள உத்தியோகத்தர் மாவட்ட செயலகம்) மற்றும் தொழில் பயிற்சி நிறுவனத்தின் பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கான நேர்காணல் இடம்பெற்று தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல்களும் வளவாளர்களினால் வழங்கப்பட்டது.

 

                    

 

                  

 

                 

கண்ணப்ப நாயனார் குரு பூசை தினம் 09.02.2025
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் தாழங்குடா அன்னை சாரதா அறநெறி பாடசாலை மற்றும் சிவதொண்டர் திருக்கூடத்து இணைந்து நடாத்திய கண்ணப்ப நாயனார் குருபூசையானது தாழங்குடா -02 கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முதலில் தாழங்குடா -03 சந்திமாரியம்மன் ஆலயத்திலிருந்து பூசை, ஊர்வலத்துடன் ஆரம்பமாகி தாழங்குடா -02 சித்தி விநாயகர் ,கண்ணகியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது , தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு ,பிரதம அதிதி உரை அத்துடன் இணைந்த வகையில் உருத்திராக்கம் அணிவித்தல், சான்றிதழ் , பரிசில்கள் வழங்கல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன. இறுதியாக அன்னதானம் வழங்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.
WhatsApp Image 2025 02 10 at 2.50.47 PM
WhatsApp Image 2025 02 10 at 12.36.00 PMWhatsApp Image 2025 02 10 at 12.36.01 PMWhatsApp Image 2025 02 10 at 12.36.01 PM1WhatsApp Image 2025 02 10 at 12.36.02 PMWhatsApp Image 2025 02 10 at 12.36.02 PM1WhatsApp Image 2025 02 10 at 12.36.04 PMWhatsApp Image 2025 02 10 at 12.36.05 PMWhatsApp Image 2025 02 10 at 12.36.06 PM
மேற்படி விடயமானது கௌரவ சனாதிபதி அவர்களின் சிந்தனைக்கு அமைவாக Clean Sri Lanka எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயண முடிவிடம்" எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரையோர பகுதிகளை சுத்தம் செய்யும் நிகழ்வானது கரையோரம் பேணல் திணைக்களம், கடல்சார் சூழலியல் பாதுகாப்பு அதிகார சபை, அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் 16.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது ஆரையம்பதி கிழக்கு, பாலமுனை, புதுக்குடியிருப்பு, கிரான்குளம் வடக்கு, கிரான்குளம் தெற்கு ஆகிய 5 இடங்களில் குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர்களின் ஒருங்கிணைப்பில் பிரதேச மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது . இதில் பிரதான நிகழ்வாக புதுக்குடியிருப்பு கடற்கரையில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி .தெட்சணகெளரி தினேஷ் அவர்களின் தலைமையில் குறித்த நேரத்திற்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக அலுவலர்கள்அனைவரும் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

மண்முனைப்பற்று பிரதேச செயலக பொங்கல் விழா 2025

மண்முனைப்பற்று பிரதேச செயலக பொங்கல் விழா 07.02.2025 வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் திருநீற்றுக்கேணி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.

முதல் நிகழ்வாக மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து திருநீற்றுக்கேணி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு நெற் கதிர், பொங்கல் பொருட்கள் என்பன ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருநீற்றுக்கேணி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் சூடடித்தல், நெல் குற்றுதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. புது அரிசி கொண்டு பிரதான பொங்கல் பானை செய்யப்பட்டது, ஒவ்வொரு கிளைக்கும் ஒவ்வொரு வகையான பொங்கல் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கலை நிகழ்வுகளின் வரிசையில் நிருவாக உத்தியோகத்தரினால் வரவேற்புரை மற்றும் பிரதேச செயலாளரினால் தலைமை உரை என்பன இடம்பெற்றதுடன் காளியம்மன் ஆலய பிரதம குரு விஸ்வப்பிம்மஸ்ரீ கிருபைரெத்தினம் சர்வேஸ்வரன் ஐயா அவர்களின் சிறப்பு சொற்பொழிவு, நடனம், வில்லுப்பாட்டு, உழவர் பாடல், போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பதினொரு வகையான பொங்கல் படைக்கப்பட்டு பூஜை இடம்பெற்றதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.

WhatsApp Image 2025 02 07 at 3.21.46 PMWhatsApp Image 2025 02 07 at 3.22.42 PMWhatsApp Image 2025 02 07 at 3.22.43 PMWhatsApp Image 2025 02 07 at 3.03.16 PMWhatsApp Image 2025 02 07 at 3.58.45 PMWhatsApp Image 2025 02 07 at 3.03.01 PM

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top