செய்திகள்
எதிர்வரும் 04.01.2023 ம் திகதி புதன்கிழமை மு.ப 8.30 மணிக்கு எமது பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள இரத்த தான முகாமில் கலந்து கொண்டு உயிரைக் காக்க உதிரம் கொடுக்க முன்வருமாறு அழைக்கின்றோம்.



2023 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகம் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மு.ப 9.00 மணிக்கு அனைத்து உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
மேற்படி நிகழ்வில் தேசிய கொடி ஏற்றல் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச சேவை சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டனர். மேலும் ஒரு நிமிட மௌன இறை வணக்கம் மேற்கொள்ளப்பட்டதுடன் பின்னர் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. அத்துடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு இந்நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.









மண்முனைப்பற்று பிரதேச செயலக வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்விற்கான பிரபல உத்தியோகத்தர் தெரிவிற்கான தேர்தல் 2022.12.21 ஆம் திகதி புதன்கிழமையன்று மு.ப 9.30 தொடக்கம் பி.ப 3.00 மணி வரையான காலப்பகுதியில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த தேர்தலில் 03 பெண் வேட்பாளர்கள் மற்றும் 01 ஆண் வேட்பாளர் உட்பட நால்வர் போட்டியிட்டிருந்ததுடன் இத்தேர்தலில் திருமதி. வசந்தமலர் பாலசந்திரன் அவர்கள் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
Manmunai Pattu Divisional Secretariat won the 3rd Place in the National Productivity Competition 2020. The Awarding Ceremony was held on December 15, 2022 at Temple Trees Colombo.



































