செய்திகள்
75 ஆவது சுதந்திர தின நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் 2023.02.04 ஆம் திகதி காலை 8.20 மணியளவில் ஆரம்பமானது. பிரதேச செயலாளர் திருமதி. ந. சத்தியானந்தி அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடர்ந்து பிரதேச செயலாளரினால் உத்தியோகத்தர்களுக்கு உரை நிகழ்த்தப்பட்டது.
மேலும் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்டம், சிரமதானம், கிராமிய புத்தெழுச்சி மையம் மற்றும் மரநடுகை திட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் 75 வயதினை பூர்த்தி செய்த 3 முதியவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பிரதேச செயலக வளாகத்தினுள் பயன்தரு வாழைமரங்கள் நடுகை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மஹா கும்பாபிஷேகம் - 2023.01.27
















