2022.10.13 1 1024x576
மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசார மற்றும் இலக்கிய விழா நிகழ்வானது 13.10.2022 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு நந்தகோபன் கலாசார மண்டபத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திரு.க.கருணாகரன் அவர்களும் சிறப்பு அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களும் கௌரவ அதிதிகளாக சுகாதார வைத்திய அதிகாரி திரு.த.பிரபாசங்கர், கோட்டக்கல்வி அதிகாரி திரு.சீ.தில்லைநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்ததுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. L.விவேகானந்தராஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. M.ஜெயசந்திரன், பாடசாலை அதிபர்கள், பிரதேச கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சிகரம் நூல் வெளியீடும், 8 கலைஞர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றதுடன் இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2022.10.13 2 1024x576
2022.10.13 3 1024x576
2022.10.13 5 1024x5762022.10.13 8 1024x576
2022.10.13 9 1024x576
2022.10.13 10 1024x576
2022.10.13 12 1024x576
2022.10.13 13 1024x576
2022.10.13 161 1024x576
2022.10.13 22 1024x576
பின்வரும் துறைகளுக்கு NAITA வுடன் ILO அமைப்பும் இணைந்து பதிவு மற்றும் மதிப்பீட்டு கட்டணம் அற்ற இலவச NVQ தர சான்றிதழை முன் அனுபவம் (RPL ஊடாக) உள்ளவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1.Cook
2.Baker
3.House keeping supervisor
4.Food and beverage professional cookery waiter
5.Steward
6.Room attendant
7. Automobile mechanics
8. Automobile electrician
9. Automobile Air conditioning technician
10. Automobile tinker
11. Automobile painter
12. Masonry
13. Plumber
14. Electrician
15. Welder
16. Carpenter
17. Care giver
NVQ 3 - 18 வயதிற்க்கு மேற்பட்டவராகவும், குறைந்தது இரண்டுவருட தொழில் அனுபவம் இருத்தல் வேண்டும்.
NVQ 4 - 21 வயதிற்க்கு மேற்பட்டவராகவும், குறைந்தது நான்குவருட தொழில் அனுபவம் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவும் திகதி 15.10.2022
 
2022.10.01 01
பிரதேச மட்ட முதியோர் தின நிகழ்வுகள் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் சிவா முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்தில் 2022.10.01 ஆம் திகதி சனிக்கிழமையன்று மு.ப 10.00 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், பிரதேச முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் முதியோர்களின் போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2022.10.01 02
2022.10.01 03
2022.10.01 04
2022.10.01 06
2022.10.01 08
2022.10.04 01மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வாணி விழா நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக பிள்ளையார் ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலக கலாசார பிரிவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் விசேட பூசையின் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் பஜனை நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து பூசை வழிபாடுகள் இடம் பெற்றன.
2022.10.04 02
2022.10.04 03
2022.10.04 04
2022.10.04 05
2022.10.04 06
2022.10.04 07
2022.10.04 08
2022.10.04 09
2022.10.04 10
பிரதேச மட்ட சிறுவர் தின நிகழ்வுகள் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்முனை Zebra விளையாட்டு மைதானத்தில் 2022.10.01 ஆம் திகதி சனிக்கிழமையன்று பி.ப 3.00 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் சிறுவர்களுக்கான போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
01
02
03
05

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top