சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் புதுக்குடியிருப்பு ஆயுள்வேத வைத்தியசாலை இணைந்து நடாத்திய 2 ஆவது நிகழ்வு 07.03.2022 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப.09.30 மணிக்கு தாழங்குடா சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு. சி.திவாகரன் அவர்களது தலைமையில் ஆரம்பமானதுடன் சிறப்பு அதிதிகளாக ஆயுள்வேத வைத்தியசாலையின் பெண் வைத்தியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதில் பாரம்பரிய உணவு பிரயோகமும் தொற்றாநோயும் எனும் தலைப்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் நாளாந்த உணவு முறைகள் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது. மேலும் குருதியமுக்க பரிசோதனை மற்றும் உடல்நிறை அளவிடல் போன்ற விடயங்கள் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் 40 இற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

47 வது தேசிய மட்ட விளையாட்டு விழாவின் முதல் கட்டமாக பிரதேச மட்ட போட்டிகள் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வலைப்பந்து, கபடி, கிரிக்கெட் மற்றும் கரப்பந்து போட்டிகள் நடைபெற்றன. 2022.03.06 ஆம் திகதி ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்ட பெண்களுக்கான போட்டியில் கலந்து கொண்ட கழகங்களின் வீராங்கனைகளை அறிமுகம் செய்யும் ஆரம்ப நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஆரையம்பதி வங்கி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்கி வரும் சபர் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் புதிய அலுவலகத்தினை திறந்து வைக்கும் வைபவமும், வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று 09.02.2022 புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் மு.ப 9.00 மணிக்கு ஆரம்பமானதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு.சி.புவனேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் ஆரையம்பதி சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர் திரு.K.நவரஞ்சன், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் கணக்காய்வு உத்தியோகத்தர் S.உனேஸ்குணாளன், பிரதேச சபை உறுப்பினர் M.I.M.நஸீம், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சபர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், ஏனைய அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
a01
a02
a03a04a05a06a07a08a09a10a11
மார்ச் 08 ஆந் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு அதன் முதலாவது நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஆரையம்பதி சிறுவர் பூங்காவிற்கு அருகில் நடாத்தப்பட்டது.
 
இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் 2022.03.06 ஆந் திகதி பி.ப 03.30 மணிக்கு ஆரம்பமானதுடன் இதில் குடும்ப வன்முறை தொடர்பான வீதியோர நாடகம் சூரியா கலாச்சார குழுவினரால் அளிக்கை செய்யப்பட்டது.
 
மேலும் இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. வி. லோகினி கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆரையம்பதி வடக்கு மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுபீட்ஷமான நாளைய தினத்துக்கான சௌபாக்கிய தேசியம் என்னும் தொனிப்பொருளின் கீழ் 74 ஆவது சுதந்திர தின விழா மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் 04.02.2022 அன்று நடைபெற்றது. இதன் போது மு.ப 8.19 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களினால் தேசியகொடி ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து தேசியகீதமும் இசைக்கப்பட்டது. பின்னர் நாட்டிக்காக உயிர் நீத்தவர்களுக்கான மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும் வரவேற்புரை மற்றும் தேசிய சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தியதான உரையினை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. ந. சத்தியானந்தி அவர்கள் நிகழ்த்தினார். அடுத்ததாக காரியாலய சுற்று சூழலை சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் 74 ஆவது சுதந்திர தினத்துக்கான மரநடுகை நிகழ்வானது 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top