செய்திகள்
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி ரண்விமன வீடமைப்பு வீட்டிற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு 2024.08.23 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி வீடமைப்பு சீட்டிலுப்பில் வெற்றி பெற்ற பயனாளியின் வீடு கையளிக்கும் நிகழ்வு 2024.08.29 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர், கிராம உத்தியோகத்தர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் வெற்றி பெற்ற பயனாளிக்கு பிரதேச செயலாளரினால் வீடு கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 2024.09.11 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.00 மணிக்கு எமது பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள இரத்த தான முகாமில் கலந்து கொண்டு உயிரைக் காக்க உதிரம் கொடுக்க முன்வருமாறு அழைக்கின்றோம்.
கிரான்குளம் மத்தி கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கு சமுர்த்தி லொத்தர் மூலம் கிடைக்கப் பெற்ற நிதியினைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட காணிக்கான உறுதிப் பத்திரம் 2024.07.08 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.












