පුවත්
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சிகளில் இணைத்துக் கொள்வதற்கான தொழிற்சந்தை நிகழ்வு.
மேற்படி நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் 25.02.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலக ஒருங்கிணைப்பாளரான திரு. மைக்கல் கொலின் அவர்களும் , திரு. ஆனந்த் (மனிதவள உத்தியோகத்தர் மாவட்ட செயலகம்) மற்றும் தொழில் பயிற்சி நிறுவனத்தின் பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கான நேர்காணல் இடம்பெற்று தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல்களும் வளவாளர்களினால் வழங்கப்பட்டது.





















மண்முனைப்பற்று பிரதேச செயலக பொங்கல் விழா 2025
மண்முனைப்பற்று பிரதேச செயலக பொங்கல் விழா 07.02.2025 வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் திருநீற்றுக்கேணி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.
முதல் நிகழ்வாக மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து திருநீற்றுக்கேணி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு நெற் கதிர், பொங்கல் பொருட்கள் என்பன ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருநீற்றுக்கேணி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் சூடடித்தல், நெல் குற்றுதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. புது அரிசி கொண்டு பிரதான பொங்கல் பானை செய்யப்பட்டது, ஒவ்வொரு கிளைக்கும் ஒவ்வொரு வகையான பொங்கல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கலை நிகழ்வுகளின் வரிசையில் நிருவாக உத்தியோகத்தரினால் வரவேற்புரை மற்றும் பிரதேச செயலாளரினால் தலைமை உரை என்பன இடம்பெற்றதுடன் காளியம்மன் ஆலய பிரதம குரு விஸ்வப்பிம்மஸ்ரீ கிருபைரெத்தினம் சர்வேஸ்வரன் ஐயா அவர்களின் சிறப்பு சொற்பொழிவு, நடனம், வில்லுப்பாட்டு, உழவர் பாடல், போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பதினொரு வகையான பொங்கல் படைக்கப்பட்டு பூஜை இடம்பெற்றதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.


















