2025 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகம் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வருடத்தின் முதல் நாளான 2025.01.01 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 8.30 மணிக்கு அனைத்து உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
மேற்படி நிகழ்வில் தேசிய கொடி ஏற்றல் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக உயிர் நீத்த அனைவரையும் நினைவுகூறும் முகமாக இரு நிமிட மௌன இறை வணக்கம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் Clean Sri Lanka பிரஜைகளின் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டிருந்ததுடன் பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. அத்துடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு இந்நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.
1 p2 p
மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் சமூக உள்வாங்கல் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்தும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் "உள்ளடங்கலான மற்றும் நிலைபேறான எதிர்காலத்திற்காக அங்கவீனமுற்ற நபர்களின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல்" எனும் தொனிப்பொருளில் 2024.12.24 ஆம் திகதி செவ்வாய்கிழமை இன்று மு.ப 9.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர், சமூக சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், புகலிட நிறுவனத்தின் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். இதன் போது மாற்றுத்திறனாளிகளின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன் அவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.12.24 01
2024.12.24 02
2024.12.24 03
2024.12.24 04
2024.12.24 05

நிரற்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்பு

குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024 இற்கான கணக்கெடுத்தல் கட்டத்தினை மேற்கொள்ளும் மண்முனைப்பற்று பிரதேச செயலக கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்பு 2024.10.07 தொடக்கம் 2024.10.10 வரையான காலப்பகுதியில் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

Capture 2024.10.10

சர்வதேச கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் நிகழ்வு 2024.10.10 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 7.30 மணிக்கு புதுக்குடியிருப்பு கடற்கரையில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Capture 1 2024.10.10

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு 2024.10.02 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையால் சுற்றுச்சூழலுக்கு மாத்திரமின்றி மனித உடலுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கப்படுகின்றது என்ற விரிவான விளக்கம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Capture 2024.10.02

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top