01
எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் சிந்தனையுடன், நிதி அமைச்சின் அனுசரனையுடன் 2022 ஆம் ஆண்டின் வரவுசெலவுதிட்ட முன்மொழிவுகளில் விசேடமாக முன்னுரிமை வழங்கி பிரதேச மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் புதிய தோற்றப்பாட்டுடன் செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் கருத்திட்டங்களை ஒரே தடவையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வினை 2022 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 8.52 எனும் சுபநேரத்தில் கிழக்கு திசை நோக்கி நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைவாக மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 189 வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதற்கு அமைவாக முதல் காலாண்டிற்குரிய 07 வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்றது.
குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு.க.கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும், மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் திரு. T.சுரேந்தர், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. M. ஜெயச்சந்திரன், ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், இத்திட்டத்தினை ஆரம்பிக்கும் முகமாக மு.ப 8.52 எனும் சுப வேளையில் கிழக்கு திசை நோக்கியதாக, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அலுவலகத்திற்கான திருத்த வேலைகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கும் முகமாக அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றதுடன், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அனுமதி கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வானது 2021.10.27 ஆம் திகதி பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெற்றது.

இந்நிகழ்வானது கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆலயங்களுக்கான நிதி மற்றும் விளையாட்டு கழகங்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

மேற்படி நிகழ்வானது 2021.10.25 அன்று நண்பகல் 12 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக செல்வாநகர், சாந்தன் வீதியிலுள்ள புதிய வங்கி கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன் அவர்களால் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

2021.10.27 ஆம் திகதியன்று நடைபெற்ற இக்களவிஜயத்திற்கான சிறப்பு அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வருகை தந்திருந்ததுடன் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வானது 2021.10.25 ஆம் திகதி பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன் மாவட்ட முன்பிள்ளைப்பருவ இணைப்பாளர் மற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது 06 முன்பள்ளிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top