மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் விதாதா வள நிலையத்தில், பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களுடைய ஆலோசனையின் பேரில் மரமுந்திரிகை விதைகளை நவீன முறையில் குறைந்த செலவில் (01 கிலோவிற்கு 80 ரூபாய் மட்டும்) உடைத்து பதனிடும் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
எமது மாவட்டத்தில் குடிசைக் கைத்தொழிலில் மரமுந்திரிகை செய்கையானது பாரிய முன்னேற்றத்தை கண்டு வரும் நிலையில் நவீன முறையில் விதைகளை உடைத்து துப்பரவு செய்து பதனிடும் செயற்பாட்டிற்கு அதி நவீன இயந்திரங்கள் தேவையாக இருப்பதனால், குறித்த சுய தொழில் முயற்சியை மேற்கொண்டு வரும் முயற்சியாளர்கள் பாரிய கஷ்டத்துக்குள்ளாகி வருகின்றமையை உணர்ந்துகொண்ட பிரதேச செயலாளர் அவர்களால், இப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக விதாதா வள நிலையத்தின் ஊடாக இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மர முந்திரிகை கைத்தொழில் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் முயற்சியாளர்கள், பொதுமக்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் இச் சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை அறியத்தருவதுடன், விதாதா வள நிலையத்தின் விஞ்ஞான தொழில் நுட்ப உத்தியோகத்தரான திருமதி.சுனிதா அகிலன் அவர்களை 070 2662 2890 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தங்களுக்கான சிறந்த சேவையினை மிக விரைவாக பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.
 

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top