சிவில் பதிவுகள்
பிறப்பு,இறப்பு மற்றும் திருமணப்பதிவு பெறல்
பிறப்பு பதிவு - பதிவு திகதி,பதிவு இலக்கம் இருந்தால்
- சரியாகவும் பூரணமாகவும் பூர்த்தி செய்யப்பட்ட இலக்கம் ஆ- 63 விண்ணப்பப் படிவம்
- ரூ.10 முத்திரை ஒட்டப்பட்ட 9”x 4½” விலாசமிடப்பட்ட கடித உறை
- ரூ.100 இற்கான பற்றுச்சீட்டு
மரணப் பதிவு -பதிவு திகதி,பதிவு இலக்கம் இருந்தால்
- சரியாகவும் பூரணமாகவும் பூர்த்தி செய்யப்பட்ட இலக்கம் ஆ- 63 ஏ விண்ணப்பப் படிவம்
- ரூ.10 முத்திரை ஒட்டப்பட்ட 9”x 4½” விலாசமிடப்பட்ட கடித உறை
- ரூ.100 இற்கான பற்றுச்சீட்டு
திருமணப் பதிவு -பதிவு திகதி,பதிவு இலக்கம் இருந்தால்
- சரியாகவும் பூரணமாகவும் பூர்த்தி செய்யப்பட்ட இலக்கம் ஆ- 121 விண்ணப்பப் படிவம்
- ரூ.10 முத்திரை ஒட்டப்பட்ட 9”x 4½” விலாசமிடப்பட்ட கடித உறை
- ரூ.100 இற்கான பற்றுச்சீட்டு
முதல் தடவை அடையாள அட்டை பெறல்
பதிவு செய்யப்படுவதற்கு உட்படுகின்ற நபர்கள்.
கீழே 1 முதல் 6 வரையான சட்டப் பிரிவுகளில் விபரிக்கப்படும் நபர்கள் பதிவு செய்யப்படுவதற்கு உட்படமாட்டார்கள் என்பதோடு, அதற்கான உரிமையும் இல்லை.
- 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்ட செல்லுபடியான வீசா அல்லது .................
- குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின் கீழ் இடப்பட்ட கட்டளை/ கட்டளைகளுக்கு அமைவாக அச்சட்டத்தின் III ஆம் பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக விடுவிக்கப்பட்ட நபர்.
- 1967 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இந்து – இலங்கை ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட செல்லுபடியான வதிவதற்கான அனுமதிப்பத்திரத்தினைக் கொண்ட நபர்.
- குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் ஏற்பாடுகளை மீறி 1971.04.05 ஆம் திகதியிற்கு முன்னர் அல்லது அத்தினம் அல்லது அதன் பின்னர் இலங்கைக்கு வருகைதந்துள்ள அல்லது வருகைதரும் நபர்கள்.
- குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் ஏற்பாடுகளை மீறி 1971.04.05 ஆம் திகதி அல்லது அதன் பின்னர் இலங்கையில் தங்கியிருக்கும் நபர்கள்.
- 1967 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இந்து – இலங்கை ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அனுப்புவதற்கு நியமிக்கப்பட்ட நபர்கள்.
இவ்வாறான நிலைக்கு உட்படாத 1971.04.05 ஆம் திகதி அல்லது அதன் பின்னர் இலங்கையில் வசிக்கும் அல்லது இலங்கைக்கு வருகை தரும் மற்றும் 15 வயது பூர்த்தியடைந்த அல்லது பூர்த்தியடையும் அனைத்து நபர்களும் பதிவு செய்யப்படுவதற்கு உட்படுவார்கள்.
பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கக்கூடிய உச்ச பட்ச காலப்பகுதி மற்றும் பொருத்தமான வயதெல்லை.
- 1971.04.05 ஆம் திகதியன்றோ அல்லது அதன் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த அல்லது சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படக் கூடிய நபர்களினால், அவர்கள் இலங்கைக்கு வருகை தந்து 6 மாத காலத்தினுள்.
- சட்டத்தின் 2 (2) பிரிவின்படி பதிவு செய்யப்படுவதற்கு உற்படாத நபர், அதன் பின்னர் அந்நபர் பதிவு செய்தலுக்கு உட்பட்ட நாளிலிருந்து 6 மாத காலப்பகுதியினுள்.
- 1981 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதியின் பின்னர் 15 வயதினைப் பூர்த்தி செய்தவர்கள், சட்டத்தின்கீழ் பதிவு செய்வதற்கு உரித்துடையவர்கள், அனைத்து நபர்களும் தாம் 15 வயதினைப் பூர்த்தி செய்த தினத்திலிருந்து ஒரு வருட காலப்பகுதிக்குள்.
பதிவு செய்து முதல் தடவை அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்க வேண்டிய ஆவணங்கள்
ஆ.ப.தி/வி/1,7,8 மாதிரிப்படிவத்துடன் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட்ட கீழ் குறிப்பிடப்படுகின்ற ஆவணங்களின் போட்டோ பிரதி. (முன்வைக்கப்பட்டுள்ள பிரதிகளினூடாக விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் பிறந்த திகதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்)
- பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி அல்லது
- உத்தேச வயதுச் சான்றிதழுடன் பிறந்த திகதியை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணம் (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/ தோட்டவிடுகைப் பத்திரம்/ உறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி)
- பிரஜா உரிமைச் சான்றிதழ் (தொடர்பு படுத்துங்கள்)
40 வயதிற்கு மேலான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது உத்தேச வயதுச் சான்றிதழ் இல்லாத விண்ணப்பதாரர் தமது பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்காக கீழ்வரும் ஆவணங்களை முன்வைக்கவும்
- மேலதிக மாவட்டப் பதிவாளரால் விநியோகிக்கப்பட்ட தேடுதல் விளைவுப் பத்திரம்.
- பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஏற்றுக் கொள்ளக்கூடிய எழுத்து மூல சாட்சி (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/ தோட்டவிடுகைப் பத்திரம்/ உறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ வயோதிபர் அடையாள அட்டை)
- பெயர், பிறந்த திகதி மற்றும் பிறந்த இடத்தினை உறுதிப்படுதுவதற்காக சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி. (மாதிரியினைத் தொடர்பு படுத்துங்கள்)
பதவியை உறுதி செய்வதற்காக முன்வைக்க வேண்டிய ஆவணங்கள்
- அரச பிரிவு – 6 மாத காலத்தினுள் பெற்றுக் கொள்ளப்பட்ட சேவைச் சான்றிதழின் மூலப் பிரதி
- தனியார் பிரிவு - 6 மாத காலத்தினுள் பெற்றுக் கொள்ளப்பட்ட சேவைச் சான்றிதழின் மூலப் பிரதி.
- வைத்தியர், பொறியியலாளர், வழக்கறிஞர், பட்டயக் கணக்காளர் மற்றும் கட்டடக்கலைஞர் போன்ற பதவிப் பெயர்களை உள்ளடக்குவதற்காக பட்டச் சான்றிதழ் மற்றும் தொழில் தகைமைச் சான்றிதழ் முன்வைக்க வேண்டும்.
- ஓய்வூதியர் என்பதை உள்ளடக்குவதற்காக ஓய்வூதியக் கடிதம்/ ஓய்வூதிய அட்டை முன்வைக்கப்பட வேண்டும்.
அடையாள அட்டை விநியோகிப்பதற்குத் அவசியமான ஏனைய ஆவணங்கள்
- பௌத்த துறவி ஆயின் பௌத்த மத அலுவல்கள் அமைச்சினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சாமனேரு/ உபசம்பதா சான்றிதழ்.
- ஏனைய மதகுருமார்களுக்காக உரிய திணைக்களம் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழ்.
- துறவு வாழ்க்கையிலிருந்து மீண்ட பின்னர் அது தொடர்பில் பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் சான்றிதழ்
- வாழ்க்கைத் துணையின் பெயரைப் பெற்றுக் கொள்வதற்காக - திருமணப் பதிவுச் சான்றிதழ்
- இலங்கை தாய் அல்லது தந்தைக்கு வெளிநாட்டில் பிறந்த நபர் ஒருவர், குடிவரவு குயகல்வுத் திணைக்களத்தினூடாக இலங்கைப் பிரஜாவுரிமையினைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் வழங்கப்படும் பிரஜாவுரிமைச் சான்றிதழ். (தொடர்பு படுத்துங்கள்)
- இரட்டைப் பிரஜா உரிமை உள்ள நபர்களாயின் இரட்டைப் பிரஜா உரிமைச் சான்றிதழ். (தொடர்பு படுத்துங்கள்)
- 1 3/8 x 7/8 அங்குல அளவிலான 3 வர்ணப் புகைப்படங்கள் முன்வைக்கப்பட வேண்டும். (பின்னணி வர்ணம் – ஆகாய நீலம்/ Sky Blue)
- முத்திரைக் கட்டணம்: 3.00 ரூபா
- குறிக்கப்பட்ட உரிய கால எல்லைக்குள் (தொடர்புபடுத்துங்கள்) பதிவு செய்வதற்கு தவறுகின்ற விண்ணப்பதாரர்கள், கால தாமதத்திற்கான காரணங்களை குறிப்பிட்டு கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக அதனை உறுதிப்படுத்தி ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் ............................ (இலக்கம்) என்ற மாதிரி (தொடர்புபடுத்துங்கள்)
- விண்ணப்பப்படிவங்களை உறுதிப்படுத்தல்:
- கிராம உத்தியோகத்தர் (கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களில் பிரதேச செயலாளர் மேலொப்பமிடுவது கட்டாயமானது).
- பாடசாலை மாணவர்களாயின் பாடசாலை அதிபர்.
- தோட்ட வதிவாளர்களாயின் தோட்ட அதிகாரி.
- விசேட தேவைகள் மற்றும் காரணங்களின் போது ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் நாயகம் மூலம் அதிகாரம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்.
விசேட அறிவித்தல்
தயவு செய்து 2017/09/01 திகதி முதல் பாவனைப்படுத்தப்பட உள்ள புகைப்படத்தின் தரம் தொடர்பான அறிவுறுத்தலுக்கு அழுத்துக > (புதிய புகைப்படத்தின் தரம்)
அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைவாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை கையளித்தல்.
சாதாரண சேவை:
விண்ணப்பப்படிவத்தினை உறுதிப்படுத்திய உத்தியோகத்தருக்கு
ஒரு நாள் சேவை:
உரிய உத்தியோகத்தர் உறுதிப்படுத்திய பின்னர் ஆட்பதிவுத் திணைக்கள கொழும்பு பிரதான காரியாலயத்தில் ஒரு நாள் சேவைப் பிரிவிற்கு
காணாமல் போன அடையாள அட்டைக்காக இணைப்பிரதியைப் பெற்றுக் கொள்ளல்.
க.கொ.: காணாமல் போன அடையாள அட்டைக்காக இணைப்பிரதியினைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் இணைப்பிரதியினைப் பெற்றுக்கொண்ட பின்னர் காணாமல் போன அடையாள அட்டை மீண்டும் கிடைக்கப் பெறுமாயின் அல்லது கண்டெடுக்கப்படுமாயின், உடனடியாக ஆணையாளர் நயாகத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
காணாமல் போன அடையாள அட்டைக்காக இணைப்பிரதி ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
2014/09/01 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைக்கான இணைப்பிரதியினை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் போது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் விபரங்களில் மாற்றங்கள் காணப்படாதவிடத்து மீண்டும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தினை முன்வைப்பது அவசியமன்று. ஆனபோதிலும் அவ்வாறான ஒரு நபர் அடையாள அட்டையில் தொழில் பெயரினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைவான ஆவணங்களை முன்வைக்க வேண்டும். அவ்வாறே பிரஜா உரிமை, இரட்டைப் பிரஜா உரிமையினைப் பெற்றுக் கொள்ளல், துறவறம் பூணுதல்,துறவறத்திலிருந்து விலகுதல், திருமணமாகுதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அதற்குரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஆ.ப.தி/வி/1,7,8 மாதிரிப்படிவத்துடன் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட்ட கீழ் குறிப்பிடப்படுகின்ற ஆவணங்களின் போட்டோ பிரதி. (முன்வைக்கப்பட்டுள்ள பிரதிகளினூடாக விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் பிறந்த திகதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்)2014/09/01 ஆம் திகதியிற்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைக்கான இணைப்பிரதியினை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது கீழ் குறிப்பிடப்படுகின்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி அல்லது
- உத்தேச வயதுச் சான்றிதழுடன் பிறந்த திகதியை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணம் (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/ தோட்டவிடுகைப் பத்திரம்/ உறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி)
- பிரஜா உரிமைச் சான்றிதழ் (தொடர்பு படுத்துங்கள்)
40 வயதிற்கு மேலான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது உத்தேச வயதுச் சான்றிதழ் இல்லாத விண்ணப்பதாரர் தமது பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்காக கீழ்வரும் ஆவணங்களை முன்வைக்கவும்
- மேலதிக மாவட்டப் பதிவாளரால் விநியோகிக்கப்பட்ட தேடுதல் விளைவுப் பத்திரம்.
- பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஏற்றுக் கொள்ளக் கூடிய எழுத்து மூல சாட்சி (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/ தோட்டவிடுகைப் பத்திரம்/ உறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ வயோதிபர் அடையாள அட்டை)
- பெயர், பிறந்த திகதி மற்றும் பிறந்த இடத்தினை உறுதிப்படுதுவதற்காக சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி. (மாதிரியினைத் தொடர்பு படுத்துங்கள்).
பதவியை உறுதி செய்வதற்காக முன்வைக்க வேண்டிய ஆவணங்கள்
- அரச பிரிவு – 6 மாத காலத்தினுள் பெற்றுக் கொள்ளப்பட்ட சேவைச் சான்றிதழின் மூலப் பிரதி
- தனியார் பிரிவு - 6 மாத காலத்தினுள் பெற்றுக் கொள்ளப்பட்ட சேவைச் சான்றிதழின் மூலப் பிரதி.
- வைத்தியர், பொறியியலாளர், வழக்கறிஞர், பட்டயக் கணக்காளர் மற்றும் கட்டடக்கலைஞர் போன்ற பதவிப் பெயர்களை உள்ளடக்குவதற்காக பட்டச் சான்றிதழ் மற்றும் தொழில் தகைமைச் சான்றிதழ் முன்வைக்க வேண்டும்.
- ஓய்வூதியர் என்பதை உள்ளடக்குவதற்காக ஓய்வூதியக் கடிதம்/ ஓய்வூதிய அட்டை முன்வைக்கப்பட வேண்டும்.
- அடையாள அட்டை விநியோகிப்பதற்கு அவசியமான ஏனைய ஆவணங்கள்
- பௌத்த துறவி ஆயின் பௌத்த மத அலுவல்கள் அமைச்சினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சாமனேரு/ உபசம்பதா சான்றிதழ்.
- ஏனைய மதகுருமார்களுக்காக உரிய திணைக்களம் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழ்.
- துறவு வாழ்க்கையிலிருந்து மீண்ட பின்னர் அது தொடர்பில் பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் சான்றிதழ்
- வாழ்க்கைத் துணையின் பெயரைப் பெற்றுக் கொள்வதற்காக - திருமணப் பதிவுச் சான்றிதழ்
- இலங்கை தாய் அல்லது தந்தைக்கு வெளிநாட்டில் பிறந்த நபர் ஒருவர், குடிவரவு-குயகல்வுத் திணைக்களத்தினூடாக இலங்கைப் பிரஜாவுரிமையினைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் வழங்கப்படும் பிரஜாவுரிமைச் சான்றிதழ். (தொடர்பு படுத்துங்கள்)
- இரட்டைப் பிரஜா உரிமை உள்ள நபர்களாயின் இரட்டைப் பிரஜா உரிமைச் சான்றிதழ். (தொடர்பு படுத்துங்கள்)
- 1 3/8 x 7/8 அங்குல அளவிலான 3 வர்ணப் புகைப்படங்கள் முன்வைக்கப்பட வேண்டும். (பின்னணி வர்ணம் – ஆகாய நீலம்/ Sky Blue)
- முத்திரைக் கட்டணம்: 15.00 ரூபா
- குறிக்கப்பட்ட உரிய கால எல்லைக்குள் (தொடர்புபடுத்துங்கள்) பதிவு செய்வதற்கு தவறுகின்ற விண்ணப்பதாரர்கள், கால தாமதத்திற்கான காரணங்களை குறிப்பிட்டு கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக அதனை உறுதிப்படுத்தி ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் ............................ (இலக்கம்) என்ற மாதிரி (தொடர்புபடுத்துங்கள்)
- விண்ணப்பப்படிவங்களை உறுதிப்படுத்தல்:
- கிராம உத்தியோகத்தர் (கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களில் பிரதேச செயலாளர் மேலொப்பமிடுவது கட்டாயமானது).
- பாடசாலை மாணவர்களாயின் பாடசாலை அதிபர்.
- தோட்ட வதிவாளர்களாயின் தோட்ட அதிகாரி.
- விசேட தேவைகள் மற்றும் காரணங்களின் போது ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் நாயகம் மூலம் அதிகாரம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்.
விசேட அறிவித்தல்
தயவு செய்து 2017/09/01 திகதி முதல் பாவனைப்படுத்தப்பட உள்ள புகைப்படத்தின் தரம் தொடர்பான அறிவுறுத்தலுக்கு அழுத்துக > (புதிய புகைப்படத்தின் தரம்)
அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைவாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை கையளித்தல்.
சாதாரண சேவை:
விண்ணப்பப்படிவத்தினை உறுதிப்படுத்திய உத்தியோகத்தருக்கு
ஒரு நாள் சேவை:
உரிய உத்தியோகத்தர் உறுதிப்படுத்திய பின்னர் ஆட்பதிவுத் திணைக்கள கொழும்பு பிரதான காரியாலயத்தில் ஒரு நாள் சேவைப் பிரிவிற்கு
ஒரு நாள் சேவை
தங்களது அவசர தேவைகளின் போது மிகவும் வினைத்திறனான சேவையினூடாக தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுத்தருவதினை நோக்காகக் கொண்டு 2003.09.01 ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இச் சேவையினைப் பெற்றுக் கொள்வதற்காக கிராம உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட்டு பிரதேச செயலாளரினால் மேலொப்பத்துடன் அல்லது பாடசாலை மாணவர்களாயின் அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது தோட்ட வதிவாளர்களாயின் தோட்ட அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆ.ப.தி./வி./1,7,8 மூலம் முதற் தடவை அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லது அதன் இணைப்பிரதி ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு தேவைக் கேற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இச் சேவைக்காக அரச கட்டணமாக 1000 ரூபா அறவிடப்படுவதுடன், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (வேலை நாட்களில்) மு.ப. 08.00 முதல் பி.ப. 12.00 வரை விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக் கொள்ளபடுவதுடன் பி.ப. 4.15 வரை அடையாள அட்டை விநியோகிக்கப்படும். ஒரு நாள் சேவையினை மிகவும் வினைத்திறன் மிக்கதாக பொது மக்களுக்கு வழங்கும் நோக்கில் 2013.04.02 ஆம் திகதி முதல் குளிரூட்டப்பட்ட கட்டிடத்தில் இச்சேவை இடம்பெற்று வருகிறது. இந்தச் சேவையினூடாக நாளொன்றிற்கு அண்ணளவாக 1000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதோடு, நேரகாலத்துடன் விண்ணப்பப்படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் துரிதமாக அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு நாள் சேவைக்கு விண்ணப்பப்படிவத்தினை சமர்ப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் சமுகமளிப்பது கட்டாயமாகும். ஆனபோதிலும் விசேட தேவை உடைய நபர்கள் (உடல், உள பாதிக்கப்பட்ட/ வயோதிபர்கள்) அவர்கள் தொடர்பில் கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் உறுதிப்படுத்துவாராயின் தாய், தந்தை, வாழ்க்கைத்துணை, சகோதர சகோதரி அல்லது சட்ட பூர்வ பாதுகாவலரிடம் அடையாள அட்டையினை கையளிக்க முடியும்.
க.கொ.: தங்களினால் முன்வைக்கப்படும் விண்ணப்பப்படிவம் தெளிவற்ற கையெழுத்தில் பூரணப்படுத்தப்பட்டிருப்பின்,முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் தெளிவின்மை, அடையாள அட்டையின் தகவல்கள் தெளிவின்மை, அத்தகவல்கள் திணைக்கள அறிக்கைகளுடன் முரண்பட்டிருத்தல், முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் முகமாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும். இதன் காரணமாக, தங்களின் அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படலாம். எனவே உரிய முறையில் சரியானதாக தங்களது விண்ணப்பப்படிவங்களை முன்வைக்க வேண்டும்.
கடவுச்சீட்டு விநியோக நடைமுறை
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு விநியோகத்தின் போது கை விரலடையாளங்களை உயிர்மானத் தரவுகளாக கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள இலங்கை அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரத்திற்கு அமைய விண்ணப்பதாரிகளின் நிழற்படங்களை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான ஏற்பாடுகளினால் இலங்கை கடவுச்சீட்டானது சர்வதேச அங்கீகாரத்துடனான பயண ஆவணமாக கருதப்படும்.
புதிய கடவுச்சீட்டு விநியோக நடைமுறை பற்றிய முக்கியமான விடயங்கள்.
விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல்
புதிய நடைமுறைக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யத்தக்கதாக திருத்தப்பட்ட K35A விண்ணப்பப்படிவம் பயன்படுத்தப்படல் வேண்டும்.
இவ்விண்ணப்பப்படிவங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம், பிராந்திய அலுவலகங்களான கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா, மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வலைத்தளமான www.immigration.gov.lk என்பவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
கை விரலடையாளங்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியமையால் எல்லா விண்ணப்பதாரர்களும் தனிப்பட்ட ரீதியில் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்திற்கோ அல்லது பிராந்திய காரியாலயங்களுக்கோ வருகைத்தருதல் அவசியமாகும்.
சர்வதேச தரத்தில் உறுதிச்செய்யப்பட்ட நிழற்படங்கள்
அச்சிடப்பட்ட நிழற்படங்கள் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எல்லா விண்ணப்பதாரர்களும் நாடெங்கிலுமுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களில் அல்லது திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம் மற்றும் அதன் பிராந்திய காரியாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட நிலையங்களில் தமது நிழற்படங்களினைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
குறிப்பிட்ட புகைப்பட நிலையங்களினால் அச்சிடப்பட்ட நிழற்படங்கள் வழங்கப்படாது, உங்களது நிழற்படங்கள் புகைப்பட நிலையங்களினால் இணையத்தின் வாயிலாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தரவுத் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
புகைப்பட நிலையங்களினால் வழங்கப்படும் புகைப்படம் பெற்றுக்கொண்டதற்கான அறிவித்தற் குறிப்பு விண்ணப்பப்படிவத்துடன் கட்டாயமாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களின் பெயர்ப்பட்டியல் செய்திப்பத்திரிகைகளிலும் எமது www.immigration.gov.lk இணையத்தளத்திலும் பிரசுரிக்கப்படும். அத்துடன் மாவட்டச் செயலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படும்.
கை விரலடையாளங்கள்
- 2015ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தஞ் செய்யப்பட்ட 1948ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் சரத்துக்களுக்கு ஏற்ப 16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது கை விரலடையாளத்தினை வழங்குதல் அவசியமாகும். கை விரலடையாளங்கள் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்திலும் பிராந்தியக் காரியாலயங்களிலுமே பெற்றுக்கொள்ளப்படும்.
- 16 வயதிற்கு குறைந்த விண்ணப்பதாரர்கள் தமது கை விரலடையாளங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
கட்டாயம்
16 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் விபரங்கள் இனிமேல் அவர்களது பெற்றோரின் கடவுச்சீட்டுக்களில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதுடன் அவர்களுக்கு தனியான கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளல் அவசியமாகும்.
மேலதிக தகவல்கள்: துரித இலக்கம் 1962 அல்லது தொலைபேசி இலக்கங்கள் 0115329200 / 0115329175