சமுர்த்தி திணைக்கள நிதி உதவியில் சமுர்த்தி ஆரோக்கியா ரண்விமன வீட்டுத்திட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவின் ஆரையம்பதி கிழக்கு , செல்வாநகர், பாலமுனை ஆகிய பிரிவுகளில் வீடற்ற நான்கு சமுர்த்தி பயனாளிகளுக்கான நிரந்தர வீட்டிற்கான அங்குரார்பண நிகழ்வானது இன்று சமுர்த்தி தலைமையக முகாமையாளரின் ஒழுங்குபடுத்தலில் பிரதேச செயலாளரின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அம்மணி, சமுர்த்தி தலைமை முகாமையாளர் திரு. க. உதயகுமார், கருத்திட்ட முகாமையாளர் திரு. சா. ஆனந்தமோகன்,சமுர்த்தி வங்கி முகாமையாளர் சோ. தமிழ்வாணி, சமூக அபிவிருத்தி உதவியாளர் திரு M. I பௌஸ் முகம்மட், திட்டமிடல் கிளை உத்தியோகத்தர் திரு.V.குபேந்திரன், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வீட்டு உரிமையாளர்கள், நலன்விரும்பிகள், CBO அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
 
 

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகெளரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 2026.10.11 ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை கொலுவைத்தலுடன் ஆரம்பமாகி 2026.10.19 ஆந்திகதி திங்கட்கிழமை வாணி நிகழ்வானது பக்திப் பெருமிதத்துடன் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் கலைவாணி கற்றல் உபகரணம் வழங்குதல் இவ்விழாவை மேலும் அலங்கரித்தன

.           

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பாலமுனை 11 கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களின் பங்களிப்புடன் ஆயுர்வேத வைத்திய முகாம் நிகழ்வு 13.10.2026 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப.9.00 - பி.ப.1.00 மணி வரை பாலமுனை குடும்பநல உத்தியோகத்தர் நிலையத்தில் நடைபெற்றது.
கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் திரு.கி.இளம்குமுதன், சிறப்பு அதிதிகளாக ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி Dr. S.சிவலக்ஷ்ன், புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர் Dr.T.குவிதாகரன், மட்டக்களப்பு ஆயுர்வேத மருத்துவ ஒருங்கிணைப்பாளர்(MOIC) Dr.வனிதா அனஸ்ரின் மற்றும் புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்ததோடு 100ற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவையினை பெற்றுக் கொண்டனர்.
 
 
 
 
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் "சொந்தமாக இருக்க ஒரு இடம் அழகான வாழ்க்கை" NHDA வீடமைப்பு வேலைத்திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளின் வீடுகளை திறந்து கையளிக்கும் 02ம் கட்ட நிகழ்வு 15.10.2026 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பு தெற்கு , புதுக்குடியிருப்பு , ஆரையம்பதி 03 ,ஆரையம்பதி தெற்கு , செல்வாநகர் கிழக்கு , ஆரையம்பதி கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பூரணப்படுத்தப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன .
குறித்த நிகழ்வில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , பிரதேசசெயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் , வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் த.சுபாக்கரன், வீடமைப்பு அதிகாரசபையின் கணக்காளர் , சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் , பிரஜாசக்தி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
 
 
 
 
 
உலக குடியிருப்பாளர் தினத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் NHDA வீடமைப்பு வேலைத்திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளின் வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 2026.10.05 நேற்றைய தினம் இடம்பெற்றது.
கிரான்குளம் , கிரான்குளம் மத்தி , கிரான்குளம் வடக்கு , செல்வாநகர் , செல்வாநகர் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நேற்றைய தினம் பூரணப்படுத்தப்பட்ட வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் பிரதேச ஒருங்கினைப்புக் குழுவின் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் த.சுபாக்கரன் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , வீடமைப்பு அதிகாரசபையின் கணக்காளர் , சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் , பிரஜாசக்தி உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
 
 

News & Events

21
அக்2026
நலம் நல்கும் நவராத்திரி விழா - 2026 

நலம் நல்கும் நவராத்திரி விழா - 2026 

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகெளரி...

குடியுரிமை சாசனம்

Scroll To Top