மண்முனைப்பற்று கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கலந்துரையாடல் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம், ஆரையம்பதி பொது சுகாதார அதிகாரி வைத்தியர் கே.ரமேஸ் உள்ளிட்ட படை அதிகாரிகள், சுகாதார துறையினர் மற்றும் பிரதேச வர்த்த சங்கத்தினர் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

சமூக இடைவெளியை பின்பற்றிய வகையில் சுகாதார முறைப்படி இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது பிரதேச மக்கள் மற்றும் வியாபாரிகளது நலனினை கருத்திற்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கக் கூடிய வகையிலான பல்வேறுபட்ட முடிவுகள் இதன்போது எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

களுதாவளை பிரதேசத்தில் செய்கைபண்ணப்பட்ட மரக்கறி வகைகள் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்றைய தினமும் விநியோகிக்கப்படவுள்ளது.

எனவே வியாபாரிகள் வருகைதந்து பெற்றுக் கொள்ளலாம் என அறியத்தருகின்றோம்.

1 - பயற்றை

2 - கத்தரி

 

 

 

 

இலங்கை ஐனநாயக சோசலீச குடியரசின் 72ஆவது தேசிய தினத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேசத்திற்கான பிரதான சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் அவர்களது தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது உதவிப் பிரதேச செயலாளர், உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மரநடுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை ஐனநாயக சோசலீச குடியரசின் 72ஆவது தேசிய தினத்தினை முன்னிட்டு எமது பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வானது எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

 

 

மண்முனைப்பற்று பிரதேசத்தின் பொங்கல் விழா ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வளாகத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் 31.01.2020 ஆந் திகதி வெள்ளிக்கிழமை காலை
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தினியின் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமாகிய திருமதி.கலாமதி பத்மராஜா இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதன்போது பாரம்பரிய முறைப்படி அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் அதிதிகளினால் பிரதான பொங்கல் பானையினை அடுப்பில் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பிரதேசத்தின் அரச திணைக்களங்கள், கிராமிய சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களினால் பொங்கல் பொங்குவதற்கு ஆயத்தமாகவிருந்த 48 பொங்கல் பானைகளையும், அலங்காரங்களையும் அதிதிகள் பார்வையிட்டதனைத் தொடர்ந்து பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

அதன்பின்னர், பிரதான அரங்கில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு, அதிதிகளின் உரை நிகழ்த்தப்பட்டதனை தொடர்ந்து சிறார்கள் மற்றும் கலைஞர்களின் அழகிய கண்கவர் கலையம்சங்கள் அரங்கேற்றப்பட்டதுடன்,
ஆரையூர் மண்ணிற்கு பெருமை சேர்க்கும் இலங்கேஸ்வரா இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றதுடன், பொங்கல் நிகழ்வின் போது சிறப்பான முறையில் அலங்காரம் செய்து பொங்கல் பொங்கிய மூன்று குழுவினரிற்கு பரிசுகள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், முதல் பரிசினை ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top