சர்வதேச முதியோர் வார விழா 2018 மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று 23.10.2018 செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் எமது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மதிப்பிற்குரிய மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சதர்சினி சிறிகாந்த் அம்மணி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.எஸ்.மகேந்திரலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் கௌரவ அதிதிகள் பலரது பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களினால் முதியோர் தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றதுடன், கதிரவன் கலைக் கழகத்தின் விஷேட பட்டிமன்றம் மற்றும் முதியோர்களால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியும் இதன்போது அரங்கேற்றப்பட்டது.
எமது பிரதேச செயலகத்தின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது பிரதேசத்தின் மூத்த கலைஞர்கள் மூவர் இதன்போது பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



























