சமூக வலுவூட்டல் பயிற்சி வேலைத் திட்டம்
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் சமூக வலுவூட்டல் பயிற்சி வேலைத் திட்டம் 03.06.2025ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கருத்திட்ட முகாமையாளர் திரு.P.பிரதீபன் , சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் திரு.பசீர் , சமுர்த்தி தலைமையக முகாமையாளர், ஏனைய கருத்திட்ட முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.












