2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்
2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டமானது 25.02.2025 ஆம் திகதியன்று பிரதேச செயலக உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பி.ப 2.00 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இக் கூட்டத்திற்கு அவதானிப்பாளர்களாக தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் திரு. ரொபட் அலோசியஸ் மற்றும் தேசிய கணக்காய்வு உத்தியோகத்தர் திரு. MIF.நபீல் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு. A.S சசிகரன்,கணக்காளர் திரு V. நாகேஸ்வரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு A.சுதாகரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு.S.திவாகரன்,பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதோடு கணக்காய்வு அத்தியட்சகர் மற்றும் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆகியோரால் கருத்துரைகளும் வழங்கப்பட்டதுடன் கூட்டமானது கணக்காளரின் நன்றியுரையுடன் பி.ப 4.15 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது
















