மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் தரம் 5ம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கருத்தரங்கு 29.06.2024 ஆந் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் வளவாளரான வி. சந்திரசேகரம் (ISA), சமுர்த்தி தலைமையக முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி சமூக சேவை உதவியாளர், NDDCB உத்தியோகத்தர், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.













