47 வது தேசிய மட்ட விளையாட்டு விழாவின் முதல் கட்டமாக பிரதேச மட்ட போட்டிகள் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வலைப்பந்து, கபடி, கிரிக்கெட் மற்றும் கரப்பந்து போட்டிகள் நடைபெற்றன. 2022.03.06 ஆம் திகதி ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்ட பெண்களுக்கான போட்டியில் கலந்து கொண்ட கழகங்களின் வீராங்கனைகளை அறிமுகம் செய்யும் ஆரம்ப நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.




















