மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் 14 பிரதேச செயலகங்களும் இணைந்து நடாத்திய மாவட்ட தைப்பொங்கல் விழா இவ் வருடம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (17) ஆந் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதன் போது எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையிலான எமது அலுவலக உத்தியோகத்தர்கலும் கலந்து கொண்டு பொங்கல் பொங்கியதனை படங்களில் காணலாம்.
















