Sinhala (Sri Lanka)English (United Kingdom)

எங்களைப் பற்றி

 

"எமது நோக்கு"

மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினுடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாய  மொன்றிற்கு வழி சமைக்கும் உரிய அரச நிறுவனமாக இருத்தல்.


"எமது கொள்கை"

அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனுடாக சமூக வழங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயாந்த செயல் திறன் மிக்கதும் பயனுறுதி மிகமதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.


எமது பிரதேச செயலகம் பற்றி...


எமது பிரதேச செயலகம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 07கி.மீ தொலைவில் ஆரையம்பதி கிராமத்தில் அமைந்துள்ளது.
எமது செயலக பிரிவானது 21.5சதுர கி.மீ பரப்பளவினை உள்ளடக்கியது. மேலும் 27 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.


எல்லைகளாக,


வடக்கே- காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவையும்

தெற்கே- மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவையும்

கிழக்கே- இந்து சமுத்திரம்
மேற்கே- மட்டக்களப்பு வாவி என்பவற்றை கொண்டு விளங்குகின்றது.


தற்போதைய பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் தலைமையின் கீழ் செவ்வனே பணியாற்றி வரும் எமது செயலக பிரிவில் ஏறத்தாழ 10294குடும்பங்களாக 34,743பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழில் மீன்பிடித்தொழில்  போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். மேலும் 23பாடசாலைகள் மற்றும் ஒரு ஆயர்வேத வைத்தியசாலை, ஒரு கிராமோதைய சுகாதார நிலையம் உட்பட 05 வைத்தியசாலைளும் இயங்கி வருகின்றன.

 
செய்திகள்/நிகழ்வுகள்