எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆரையம்பதி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் போதைப்பொருள் பாவனையின் தாக்கம், போதைப்பொருள் இடையூறிலிருந்து மீட்டுக்கொள்ளல் மற்றும் போதைப்பொருள் பாவனையினை எதிர்த்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை வழங்கும் பொருட்டு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில்  திங்கட்கிழமை 01.04.2019 காலை 09.00 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.


இதன்போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் உபபொலிஸ் பரிசோதகர் , பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் குடும்பநல உத்தியோகத்தர்கள், சமுர்தி முகாமையாளர்கள், சமுர்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கலாக பெருமளவானோர் கலந்துகொண்டதுடன், வீதியினால் பயணித்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் இதன்போது விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2019 04 01 at 11.53.11 AM

 

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top