“தைரியமாக முன்னோக்கி செல்வதற்காக எமது சிறுவர்களைப் பலப்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் மண்முனைப்பற்று பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்திப் பிரிவு மற்றும் சமுர்த்தி பிரிவு ஆகியன இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாக முன்றலில் நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக திருமதி வை.லோகேஸ்வரராஜா அவர்கள் கலந்துகொண்டதுடன், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது சிறுவர் கழகங்கள் , முன்பள்ளி சிறார்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களினால் கண்கவர் நடன நிகழ்வுகள் , பாடல்களுக்கான அபிநயம் மற்றும் விழப்புணர்வு நாடகம் என்பன இதன்போது அரங்கேற்றப்பட்ட துடன், அதிகலவிலான சிறார்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை சிறப்பம்சமாகும்.
இறுதியில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியின்போது தெரிவுசெய்யப்பட்ட 10 ஆக்கங்களக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன், போட்டியில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தினால் இரு பயனாளிகளுக்கு வாழ்வாதார திட்ட கொடுப்பனவும் வழங்கப்பட்டன. மேலும் சமுர்த்திப் பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சிப்தொற புலமைப்பரிசில்களும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.






















