மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் "அத்தம" தேசிய வேலைத்திட்டம்.
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்ட "அத்தம, " வேலைத்திட்டத்தின் கீழ் கடற்கரை தூய்மைப்படுத்தல் நிகழ்வானது 19.09.2026 அன்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர்,சமுர்த்தி முகாமையாளர், பாதுகாப்பு படை உத்தியோகத்தர்,சுகாதார வைத்திய அதிகாரி,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பிரதேச சபை துப்பரவு பணியாளர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், பொதுமக்கள், சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் வேலைத்திட்டமானது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் 27 கிராம சேவகர் பிரிவுகளிலும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களின் தலைமையில் நடைபெற்றது. அத்துடன் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கான விசேட வேலைத்திட்டமாக புதுக்குடியிருப்பு கடற்கரை துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















